தேயிலைக் கொழுந்துகளை பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளியொருவர் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார்.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் தெல்பத்தைத் தோட்டத்தைச் சேர்ந்த பழனியப்பன் காலியம்மா (வயது 30) என்ற மூன்று பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.
தெல்பத்தைத் தோட்டத்தில் ஏனைய பெண் தொழிலாளர்களுடன் தேயிலைக் கொழுந்துகள் பறிக்கும் கடமையில் ஈடுபட்டிருந்தப் போது மேற்படி பெண் தொழிலாளி மயக்கமடைந்த நிலையில் கீழே விழுந்துள்ளார்.
அதையடுத்து அப்பெண்ணுக்கு முதலுதவிகளைச் செய்து அவரை அமரச் செய்து விட்டு ஏனைய தொழிலாளர்கள் கடமைகளைத் தொடர்ந்தனர்.
சிறிது நேரத்தில் அப்பெண் நினைவிழந்த நிலையில் பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த வைத்தியர்கள் அப்பெண் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பான தீவிரப் புலன் விசாரணைகளை பதுளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.