|
காலி- உணவட்டுன பகுதியில் கைக்குண்டை வைத்திருந்ததாக வர்த்தகர் ஒருவரை ஹபரதுவ பொலிஸார் திங்கட்கிழமை கைது செய்தனர்.
இவரது வீட்டை சோதனையிட்ட போது வீட்டின் அலுமாரியில் இக்குண்டு இருப்பதை பொலிஸார் கண்டுபிடித்தனர். இக்குண்டு எப்படி இவருக்கு கிடைத்தது என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர் மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். |