இராணுவத்திலிருந்து தப்பியோடியோருக்கு அரசு மீண்டுமொரு முறை பொதுமன்னிப்பு வழங்கவுள்ளது.
இராணுவத்திலிருந்து தப்பியோடியோரைக் கைது செய்து மீண்டும் படையணிகளில் இணைப்பதற்கும் அவர்களை உரிய முறையில் சம்பந்தப்பட்ட படையணிகளிலிருந்து விடுவிப்பதற்காக பொதுமன்னிப்பு வழங்கவும் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் உரிய பலன் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இராணுவத்திலிருந்து தப்பியோடியோர் சரணடையும் விதத்தில் மீண்டுமொருமுறை பொது மன்னிப்பு வழங்க அரசு முன்வந்துள்ளது.
அடுத்த மாதம் 2 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை பொதுமன்னிப்பு காலமாயிருக்குமென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்தக்கால அவகாசத்தைப் பயன்படுத்தி இராணுவத்திலிருந்து தப்பியோடியோர் சரணடையுமாறும் இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.