மனித உரிமைகளுக்கான வட, கிழக்கு செயலகத்தின் தலைவரான அருட்தந்தை எம்.எக்ஸ். கருணாரட்ணம் அடிகளாரின் படுகொலைக்கு நோர்வே கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மோதலினால் ஏற்கனவே அதிகரித்துவரும் பொதுமக்கள் இழப்புகளுடன் கருணாரட்ணம் அடிகளின் படுகொலைச் சம்பவமும் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்திருப்பதாக கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் நேற்று செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
அருட்தந்தை கருணாரட்ணத்தின் குடும்பத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நோர்வே அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கையின் ஓரங்கமாக வட, கிழக்கு மனித உரிமை செயலகம் 2004 ஜூலையில் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.