Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 23, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்களுடன் அமெரிக்க உயரதிகாரி திடீர் சந்திப்பு
[23 - April - 2008] [Font Size - A - A - A]
பி.ரவிவர்மன்

கொழும்புக்கு வருகை தந்திருக்கும் அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உயரதிகாரி டொனால்ட் கெம்மும் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் பிளேக்கும் தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்.களுடன் நேற்று செவ்வாய்க்கிழமை திடீர் சந்திப்பு ஒன்றை நடத்தியதுடன், வட,கிழக்கின் தற்போதைய நிலைவரம், மாகாணசபைத் தேர்தல் மற்றும் மனித உரிமை நிலைவரம் என்பன குறித்து விபரமாகக் கேட்டறிந்துள்ளனர்.

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணி தொடக்கம் சுமார் இரு மணி நேரம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்களின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், எஸ். பத்மநாதன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் இந்தச் சந்திப்பின் போது கலந்து கொண்டனர்.

இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமைகள், தொடரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள், இனநெருக்கடித் தீர்வு முயற்சிகள் தொடர்பாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் என்பன தொடர்பாக அமெரிக்கா அரசின் வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகாரங்களுக்கு பொறுப்பான உயரதிகாரி டொனால்ட் கெம் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் பிளேக் ஆகியோர் விரிவாக கேட்டறிந்துள்ளனர்.

இந்தச் சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கையில் தெரிவித்ததாவது;

"வடக்கு,கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசத்தில் மட்டுமன்றி, தென்னிலங்கையிலும் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் சம்பவங்கள் மிக மோசமானளவில் அதிகரித்துள்ளன.

அரச படையினராலும் ஆயுதக் குழுக்களினாலும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆட்கடத்தல், கப்பம் கோரல், பாலியல் வல்லுறவு, கைது, காணாமல் போதல், படுகொலை போன்ற மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக பல்வேறு தரப்பினராலும் அரச தரப்பின் உயர்மட்டத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ள போதிலும் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரையும் எடுக்கப்படவில்லை.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் ஆயுதக் குழுக்களினால் சிறுவர்கள் மட்டுமன்றி, இரவு நேரங்களில் பெண்களும் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

வன்னிப் பிரதேசத்தில் விமானக் குண்டு வீச்சுகள் மற்றும் ஆழ ஊடுருவும் படையினரின் தாக்குதல்கள் காரணமாக பாடசாலை மாணவர்கள், மதகுருமார்கள், அரச உயரதிகாரிகள் ஆகியோர் படுகொலை செய்யப்படும் நிலைமை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

யாழ்.குடாநாட்டு மக்கள் பொருளாதாரத் தடை காரணமாக பட்டினிச்சாவை எதிர்கொண்டுள்ள நிலையில், இராணுவ ஆக்கிரமிப்பு காரணமாக பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்.

தமிழர் தாயகப் பிரதேசமான வடக்கும், கிழக்கும் பிரிக்கப்பட்ட நிலையில், அங்கு ஏற்கனவே நடத்தப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலும் நடைபெறப்போகும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலும் சர்வதேச சமூகத்தையும் நாட்டு மக்களையும் ஏமாற்றும் அரசின் ஒரு மோசடி நடவடிக்கையாகும்.

தொடரும் அரசின் மனித உரிமை மீறல் சம்பவங்கள் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்காவும் சர்வதேச சமூகமும் மனிதாபிமான ரீதியில் துரித நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Email this page Your Opinion Print this page
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிடமிருந்து வெளிப்படையான தீர்வை எதிர்பார்க்க முடியாது
தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்களுடன் அமெரிக்க உயரதிகாரி திடீர் சந்திப்பு
கொழும்பில் அரிசிக்கு பெரும் தட்டுப்பாடு வெளியிடங்களிலிருந்து லொறிகள் வரவில்லை
கருணாரட்ணம் அடிகள் படுகொலைக்கு நோர்வே அரசு கடும் கண்டனம்
மனித உரிமை மீறல்களை சர்வதேச சமூகத்திடம் எடுத்துச்செல்வதில் பெரும் பங்களிப்பு வழங்கியவர்
முகமாலையில் கவசப்படையணி முன்னேற முயற்சி முறியடித்ததாக விடுதலைப் புலிகள் தெரிவிப்பு
ஆனைவிழுந்தான் பகுதியில் கிளைமோர் தாக்குதல் பூநகரி ப.நோ.கூ.ச. பணியாளர் இருவர் காயம்
இராணுவத்திலிருந்து தப்பியோடியோருக்கு அரசாங்கம் மீண்டும் பொதுமன்னிப்பு
ஈரான் ஜனாதிபதியின் தெற்காசிய விஜயம் அமெரிக்கா முன்வைக்கும் `நிபந்தனைகள்'
நிதி உதவிக்காக ஈரான், சீனா பக்கம் கவனத்தை திருப்பியுள்ள இலங்கை
அரசின் மனித உரிமை மீறல்கள் உலகிற்கு தெரியவருவதை தடுக்கவே கருணாரட்ணம் அடிகள் கொல்லப்பட்டார்
முல்லைத்தீவில் விமானத் தாக்குதலில் இளைஞன் பலி; 2 சிறுமிகள் உட்பட 8 பேர் காயம்
மனைவியை பிரிந்து வாழும் மனநோயாளியை காணவில்லை ; சகோதரி பிரதியமைச்சரிடம் புகார்
வங்கி ஊழியர் சங்கம், வர்த்தக ஊழியர் சங்கத்துடன் இணைந்து ஐ.தொ. சம்மேளனத்தின் மே தின நிகழ்வுகள்
வர்த்தகர் வீட்டில் கைக்குண்டு மீட்பு
கருணாரட்ணம் அடிகளாரின் படுகொலைக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடும் கண்டனம்
தேயிலை கொழுந்துகளை பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி மயங்கி விழுந்து மரணம்
கிழக்கில் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணி இன்று ஆரம்பம்
கடத்தப்பட்ட இருவர் குறித்து நடவடிக்கையெடுக்குமாறு உத்தரவு
இராணுவ வீரர் கத்திக் குத்துக்கு பலி
ஆயுதங்கள் சகிதம் ஐந்து கொள்ளையர் செட்டிகுளத்தில் பொலிஸாரால் கைது
பட்டவத்தை ஆட்டோ விபத்தில் ஒருவர் பலி, ஐவர் படுகாயம்
தமிழ் பேசும் சமூகத்தின் ஒற்றுமைக்காக அர்ப்பணித்திருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றியடைவது நிச்சயம்
தரமான தேயிலையை உற்பத்தி செய்யாத தொழிற்சாலைகளின் அனுமதி ரத்து செய்யப்படும்
பிரிட்டிஷ் பிரஜை கடலில் மூழ்கி மரணம்
"எமது சமூக அமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளால் மூத்தோர் பராமரிப்பு பாரிய சுமையாக மாறி வருகின்றது"
அரிசி விலைப் பட்டியல் காட்சிப்படுத்தப்படாமையினால் பாவனையாளர்களுக்கு பெரும் இடையூறு
நாடுபூராவும் ஜனநாயக சூழலை உருவாக்கும் நடவடிக்கையையே ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார்
வழிகாட்டல் முறையாக முன்னெடுக்கப்படுமாயின் ஒவ்வொரு குடும்பமும் சமாதானத்தை அனுபவிக்க முடியும்
22 வருடங்கள் நரிகளாக இருப்பதை விட 2 ஆண்டுகள் சிங்கமாக இருக்க விரும்புகிறேன்
வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிப்பதன் மூலமே முஸ்லிம் முதலமைச்சரை பெற்றுக் கொள்ள முடியும்
வங்குரோத்தான அரசியல் கட்சிகளை நம்பி ஏமாறாமல் ஐ.ம.சு. முன்னணியையே மக்கள் ஆதரிக்க வேண்டும்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எந்த இனம் வெற்றி பெற்றாலும் மற்ற இனத்தின் உதவியுடனேயே ஆட்சியமைக்க முடியும்
தமது மண்ணை பேரினவாதிகளின் கெடுபிடிகளிலிருந்து மீட்பதற்காக தமிழ் மக்களும் இம்முறை ஐ.தே.க.வுக்கே வாக்களிக்க முடிவு
சக இன மக்களின் நிலங்களை சுவீகரிப்பது கூட்டான ஆட்சிமுறைக்கு விரோதமானது
இம்முறை மேதின ஒன்றுகூடல்கள் எவையுமில்லை
கல்விமாணி கற்கைநெறி பரீட்சை நேர சூசியில் ஏற்பட்ட மாற்றத்தினால் மாணவர் பாதிப்பு
அரசின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை உலகிற்கு வெளிப்படுத்தியவர் கருணாரட்ணம் அடிகள்
படுகொலை செய்யப்பட்டோரின் உடல்களை காகங்கள் குதறிய வண்ணம் இருந்ததை கண்டேன்
சாய்ந்தமருது நெடுஞ்சாலை புனரமைப்பு பணியை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com