Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 23, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
பங்களாதேஷுடனான `ருவென்ரி - 20' ல் பாகிஸ்தான் அணி 102 ஓட்டத்தால் வெற்றி
[23 - April - 2008] [Font Size - A - A - A]
பங்களாதேஷுக்கு எதிரான `ருவென்ரி - 20' போட்டியில் மிஸ்பா - உல் - ஹக் அதிரடியாக ஓட்டங்கள் எடுக்க பாகிஸ்தான் 102 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பங்களாதேஷ் அணி 5 ஒரு நாள் மற்றும் ஒரு `ருவென்ரி - 20' போட்டி கொண்ட தொடர்களில் விளையாடியது. ஒரு நாள் தொடரை பாகிஸ்தான் 5-0 என முழுமையாக வென்றது. இந்நிலையில் ருவென்ரி - 20' போட்டி நேற்று முன்தினம் கராச்சியில் நடந்தது. நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் முதலில் ஆடியது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய சல்மான் பட் (1), அக்மல் (0) விரைவில் வெளியேறி அணிக்கு மோசமான தொடக்கம் கொடுத்தனர். அடுத்து வந்த மிஸ்பா, யூனிஸ் கானுடன் ஜோடி சேர்ந்தார். யூனிஸ் 7 பவுண்டரி உட்பட 28 பந்தில் 47 ஓட்டங்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை 3 ஓட்டங்களில் நழுவவிட்டார்.

கப்டன் சொய்ப் மாலிக் 3 சிக்ஸர், 2 பவுண்டரி உட்பட 18 பந்தில் 35 ஓட்டங்கள் எடுத்தார். அப்ரிடி (10) இம்முறை சோபிக்கவில்லை. 5 சிக்ஸர், 3 பவுண்டரி விளாசிய மிஸ்பா 53 பந்தில் 87 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமலிருந்தார்.

பாகிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ஓட்டங்கள் எடுத்தது. கடின இலக்கை `சேஸ்' செய்த பங்களாதேஷின் தமிம், நசிமுதின் ஓரளவு நல்ல தொடக்கம் கொடுத்தனர். தமிம் 23 ஓட்டங்கள் எடுத்தார். நிதானமாக விளையாடிய நசிமுதின் 48 பந்தில் 42 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கப்டன் அஷ்ரபுல் 13 ஓட்டங்களுக்கு நடையை கட்டினார்.

மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, பங்களாதேஷ் 16 ஓவரில் 101 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் 102 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Email this page Your Opinion Print this page
அணிகளின் விபரங்கள்
மெக்கலத்தின் அதிரடியுடன் தொடங்கிய ஐ.பி.எல். திருவிழா
2 ஆவது போட்டியிலும் யுவராஜின் அணி தோல்வி வாட்சனின் அதிரடியால் வோர்னின் அணி வெற்றி
`இளம் வீரர்கள் அதிகமுள்ள அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது'
இவ்வாண்டின் முதல் கிண்ணத்தை சுவிஸின் பெடரர் கைப்பற்றினார்
`உலக கிரிக்கெட் அட்டவணையில் ஐ.பி.எல். போட்டியை சேர்க்க வேண்டும்'
`ருவென்ரி -20 ' இல் மெக்கலத்தின் சாதனையை முறியடிப்பேனென்கிறார் அப்ரிடி
பாகிஸ்தானுடன் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்கு நியூசிலாந்து இணக்கம்
பங்களாதேஷுடனான `ருவென்ரி - 20' ல் பாகிஸ்தான் அணி 102 ஓட்டத்தால் வெற்றி
ஆசிய தலைவர் கிண்ண உதைபந்தாட்ட போட்டி கொழும்பில் இன்று ஆரம்பம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com