ஈஸ்டோரில் ஓப்பன் டெனிஸ் சாம்பியன் பட்டத்தை சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் வென்றதன் மூலம் 2008 ஆம் ஆண்டில் தன் முதல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ரோஜர் பெடரர் ரஷ்ய வீரர் டேவிடென்கோவை வீழ்த்தினார். முதல் செட்டை 7-6 என்று பெடரர் கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டில் டேவிடென்கோ 2-1 என்று முன்னிலை பெற்றிருந்தபோது கால் காயம் காரணமாக ஆட்டத்தை மேலும் தொடர முடியாமல் வெளியேறினார்.
இந்த வெற்றியின் மூலம் தனது 54 ஆவது சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள பெடரர் அடுத்த வாரம் தொடங்கவுள்ள மான்ட்டி கார்லோ மாஸ்டர்ஸ் டெனிஸ் தொடருக்கு உற்சாகமான மனோ நிலையில் பங்கேற்கவுள்ளார்.
டேவிடென்கோ இதற்கு முன்னர் நடைபெற்ற 11 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.