`மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது ஊக்கம் தருகிறது. இளம் வீரர்கள் அதிகம் உள்ள அணிக்கு வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது' என டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். ஐந்தாவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் டிராவிட் தலைமையிலான பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் தோற்கடித்தது. இதையடுத்து டிராவிட் அளித்த பேட்டியில்;
"மும்பைக்கு எதிரான வெற்றி இத்தொடருக்கு அதிக ஊக்கம் தந்திருக்கிறது. அணி மீதான நம்பிக்கை நிரூபிக்கப்பட்டுள்ளது. கலிஸ்- பவுச்சர் ஜோடியின் அசத்தல் கூட்டணி வெற்றிக்கு வித்திட்டது. அடுத்து ராஜஸ்தான் ரோயல்ஸுக்கு எதிராக உள்ள போட்டிக்கு இடையிலுள்ள நான்கு நாட்கள் ஓய்வை நன்றாகப் பயன்படுத்திக் கொள்வோம்.
இளம் வீரர்களின் பங்களிப்பு தொடரில் முக்கியமானதாக இருக்கும். குறைந்த அனுபவ வீரர்கள் பெரியளவில் சாதிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறேன். இந்தப் புதிய சூழ்நிலைகளுக்கு பழகிய பின் அவர்கள் பிரகாசிக்கத் தொடங்குவார்கள்" என்றார்.
"ஹர்பஜன்சிங் கூறுகையில்;
சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தினோம். இந்த ஒரு தோல்வி தொடரில் அதிக பின்னடைவைத் தந்துவிடாது. இது ஒரு நீண்ட தொடர். சிறப்பாக சாதித்துக் காட்டுவோம்" என்றார்.
காயத்தால் அவதிப்பட்டு வரும் சச்சின் ஆடுவது குறித்து இரண்டொரு நாட்கள் கழித்தே தெரிய வருமென்று கூறப்படுகிறது.