திருமணமாகாமை பற்றிய சான்றிதழ் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் எதுவும் பிரதேச செயலகத்தினாலோ அல்லது மாவட்ட செயலகத்தினாலோ ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என வவுனியா மாவட்ட அரச அதிபர் சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு செல்வதற்காகவும் வெளிநாடுகளில் திருமணம் செய்வதற்காகவும் திருமணமாகாமை பற்றிய உறுதிச் சான்றிதழ் வவுனியா மாவட்ட விண்ணப்பதாரிகளுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்தது.
குறித்த சான்றிதழ் வழங்குவதற்கு மாவட்ட செயலாளருக்கு எதுவித சட்டரீதியான கடப்பாடும் இல்லை என்றும் இனிமேல் அவ்வாறான சான்றிதழ்களை வழங்க வேண்டாமென்றும் பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.