கடல்கோள் அனர்த்தத்தின் பின்னர் பாடசாலைக் கல்வியை விட்டு இடைவிலகிய மாளிகைக்காடு பிரதேச மாணவர்களை மீண்டும் பொருத்தமான பாடசாலைகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மாளிகைக்காடு முற்போக்கு வாலிப முன்னணி மேற்கொண்டு வருகின்றது.
நிரந்தரமான வசிப்பிடம் இன்மையாலும் பெற்றோரை இழந்ததாலும் பாடசாலைகள் தூரப் பிரதேசங்களுக்கு மாற்றப்பட்டதாலும் வறுமை காரணமாகவும் இவ்வாறான மாணவர்களின் இடைவிலகல் ஏற்பட்டிருக்கலாம் என அறியப்பட்டுள்ளது.
இம் மாணவர்களின் தற்போதைய நிலை பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் இவ்வாறான மாணவர்களுக்குப் பரிகாரக் கற்பித்தல் முறை ஒன்றை ஏற்படுத்தவும் இக் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாளிகா முற்போக்கு வாலிப முன்னணியின் செயலாளர் எம்.எச்.எம்.சக்காப் தெரிவித்தார்.