Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, April 24, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
`ஐ.பி.எல் பிரமாண்டமான வளர்ச்சி அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது'
[24 - April - 2008] [Font Size - A - A - A]
இந்திய கிரிக்கெட் சபையால் தொடங்கப்பட்ட இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்) பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளதாக முன்னாள் கப்டன் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில்;

"சில நாடுகளில் மட்டுமே இருந்த கிரிக்கெட் இன்று வீரர்கள் ஏலத்தால் கிரிக்கெட் இல்லாத நாடுகளிலும் பிரபலமாக ஐ.பி.எல். வழி செய்துள்ளது. எதிர்காலத்தில் பிரான்ஸ், நைஜீரியா ஏன் ஆப்கானிஸ்தான் வீரர்கள் கூட இங்கு விளையாடலாம். லலித் மோடி துணிச்சலாக இதனை செய்து காட்டியுள்ளார். ஐ.பி.எல்.நிர்வாகத்தின் புதிய மாற்றங்களையும் புதிய முதலீட்டாளர்களையும் பார்த்து தடுமாறும் போதே அது வானம் எட்டுமளவுக்கு வேகமாக வளர்ந்து விட்டது.

ஷாருக்கான் போன்ற சினிமா நட்சத்திரங்கள் கலந்துவிட்ட கிரிக்கெட்டின் வளர்ச்சி முடிவில்லாதது. இதனால், டெஸ்ட் கிரிக்கெட்டின் புனிதத்தன்மை கெட்டுவிடும் என நினைக்க வேண்டாம். இளம் வீரர்கள் பணத்துக்கு முன்னுரிமை தராமல் திறமைக்கு மதிப்பளித்து விளையாடுவதால் நாடு பெருமைப்பட வேண்டும்.

கிரிக்கெட்டில் ்ருவென்ரி- 20' நல்லதாகத் தெரிகிறது. ஐ.பி.எல்.மூலம் ஷேன் வோர்ன் மாயாஜால பந்து வீச்சையும் திண்டா, ஜடேஜா , சாலுங்கே ,சாகா என இளம் வீரர்களின் துடிப்பான ஆட்டத்தையும் காண முடிகிற"தென்றார்.

Email this page Your Opinion Print this page
ஷேவாக்கின் அற்புதமான ஆட்டத்தால் லட்சுமண் அணி தோல்வியை தழுவியது
மிகவும் சிறப்பாக விளையாடும் அணியே ஐ.பி.எல் வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றும்
ஐ.சி.சி. டெஸ்ட் தர வரிசையில் தொடர்ந்து முதலிடம் வகிப்போம்
எந்த அணியையும் எங்களால் வெல்ல முடியும் ராஜஸ்தான் ரோயல் கப்டன் வோர்ன் சவால்
`ஐ.பி.எல் பிரமாண்டமான வளர்ச்சி அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது'
பலத்த பாதுகாப்புடன் ஒலிம்பிக் ஜோதி அவுஸ்திரேலியாவை வந்தடைந்தது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com