*பொண்டிங் கூறுகிறார்
ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன் தர வரிசையில் தொடர்ந்து 4 ஆவது ஆண்டாக முதலிடம் வகித்து வருகிறது அவுஸ்திரேலியா. அதனை உறுதி செய்யும் விதமாகத் தொடர்ந்து டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திலேயே இருப்போமென்று அவுஸ்திரேலிய அணித் தலைவர் ரிக்கி பொண்டிங் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஒரு நாள் போட்டித் தரவரிசையில் தென்னாபிரிக்கா அவுஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் வகித்து வருகிறது. டெஸ்ட் தரவரிசையில் இந்தியா 2 ஆவது இடம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் தனது அணி தொடர்ந்து முன்னிலை வகிக்குமென்று கூறிய பொண்டிங் அணியில் உள்ள இளம் வீரர்கள் தன்னைப் போன்ற மத்யூ ஹைடன் போன்ற மூத்த வீரர்களின் உதவியுடன் தொடர்ந்து வெற்றிகளைக் குவிப்பார்கள் என்றும் இதனால், முதலிடத்தைத் தொடர்ந்து தக்கவைக்க முடியுமென்றும் கூறினார்.
இருந்த போதிலும் இந்தியாவும் தென்னாபிரிக்காவும் கடந்த சில ஆண்டுகளாக அபாரமாக விளையாடி வருகின்றன. எனவே, பொறுத்திருந்து பார்ப்போமென்றும் பொண்டிங் கூறினார்.