செட்டிகுளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு கைதான கொள்ளைச் சந்தேக நபர்களான ஐவரையும் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய பொலிஸாருக்கு வவுனியா நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
வவுனியா தேக்கம்காடு, தோணிக்கல் பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள் மீதான விசாரணை முடிந்ததும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, செட்டிகுளம் பிரதேசங்களில் அண்மைக் காலங்களில் இரவு நேரங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் இவர்களுக்கு தொடர்புகள் இருப்பதாக தாம் சந்தேகிப்பதாகவும் இவர்கள் ஒரு குழுவாக செயற்பட்டுள்ளனர் எனவும் தமது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொதுமக்கள் கொடுத்த தகவலின்படி இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொதுமக்கள் தற்போது இரவு நேரங்களில் விழிப்பாக இருந்து செயற்பட்டு கொள்ளையர்களைப் பிடிக்க உதவுவதாகவும், இதேபோல் செயற்பட்டால் கொள்ளைகளை முற்றாக ஒழிக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.