யாழ்ப்பாணம் முகாமாலைப் பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற கடும் சமரில் கொல்லப்பட்டவர்களில் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட படையினரின் சடலங்கள் பொலித்தீன் உறைகளில் சுற்றப்பட்டிருப்பதையும் அவற்றை படையினரிடம் ஒப்படைப்பதற்காக விடுதலைப் புலிகளின் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் மு.பாவரசனால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதியான பிரான்சின் றோயிடம் சடலங்கள் ஒப்படைக்கப்படுவதையும் வவுனியாவுக்கு கொண்டுவருவதற்காக சடலங்கள் லொறிகளில் ஏற்றப்படுவதையும் இங்கு காணலாம்.
வடக்கு, கிழக்கு மனித உரிமைகள் செயலகப் பணிப்பாளர் கருணாரட்ணம் அடிகளாரின் படுகொலையைக் கண்டித்து ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ள ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் பொதுமக்களையும் காணலாம்.