*ஐரோப்பிய ஒன்றியம்
இஸ்லாமாபாத்: அல்-ஹைடா தீவிரவாத அமைப்புடன் பாகிஸ்தான் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாதென ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டுக் கொள்கை தலைவர் ஜாவியர் சோலானா தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அவர் இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;
அல்-ஹைடா தீவிரவாதக் குழு பாகிஸ்தானின் சட்டத்துக்கும் அரசியல் சட்டத்திற்கும் எதிராக செயற்பட்டு வருகின்றது.
எனவே, அந்த இயக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது. ஆனால், பழங்குடி இனமக்கள் வசிக்கும் பகுதியில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக தலிபான் இயக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நான் ஆதரிக்கிறேனெனத் தெரிவித்தார்.
அத்துடன், ஜாவியர் ஜனாதிபதி முஷாரப் மற்றும் பிரதமர் ஹிலானி ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார்.