சுரேஸ் ரெய்னாவின் ஆட்டத்தை அவுஸ்திரேலியாவின் மத்யூ ஹைடன் வெகுவாகப் பாராட்டியுள்ளார் .
சென்னையில் புதன்கிழமை நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 8 ஆவது ஆட்டத்தில் சென்னை சுப்ப கிங்ஸ் அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் `திறில்' வெற்றி பெற்றது. சென்னை அணி 200 ஓட்டங்கள் எடுக்க ஹைடன் (81 ஓட்டங்கள்), சுரேஷ் ரெய்னா (53 ஓட்டங்கள்) ஆகியோரது ஆட்டம் முக்கிய பங்கு வகித்தது.
ஆட்ட நாயகன் விருது பெற்ற ஹைடன் , ரெய்னாவை வெகுவாகப் புகழ்ந்தார். அவர் கூறுகையில்;
`இந்த இனிங்ஸில் உண்மையிலேயே என்னை விட ரெய்னா சிறப்பாக ஆடினார். அவரிடம் நிறையத் திறமைகள் உள்ளன. அவர் தொடர்ந்து விளையாடுவதை நான் விரும்புகிறேன்' என்றார்.
சென்னை அணியின் பயிற்சியாளர் கெப்ளர் வெஸ்சல்ஸ் கூறுகையில் ;
`நாங்கள் இதுவரை ஆடிய 2 ஆட்டத்திலும் ரெய்னா அபாரமாக ஆடியிருக்கிறார். ஹைடன், மைக்கேல் ஹஸி ஆகியோர் அவுஸ்திரேலியா சென்ற பின் அணியில் ரெய்னாவுக்கு மிகப்பெரிய பொறுப்பிருக்கிறது' என்றார்.