*மாவோயிஸ்ட்டுகளின் தலைவர் பிரசண்டா
இந்தியாவுடன் நேபாளம் செய்து கொண்டுள்ள அனைத்து ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்படும் என்று நேபாள மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா கூறியுள்ளார்.
நேபாளத்தில் மாவோயிஸ்ட்டுகள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் அக்கட்சி தலைவர் பிரசண்டா அளித்துள்ள பேட்டி வருமாறு;
1950 இல் இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட அமைதி மற்றும் நட்புறவு ஒப்பந்தம் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற எங்கள் கட்சி நிலையில் மாற்றமில்லை.
அனைத்து நாடுகளுடன் நெருங்கிய உறவை பராமரிக்க வேண்டும் என்பது எங்கள் கட்சியின் நிலைப்பாடாகும். எனவே, பயங்கர வாதிகள் பட்டியலில் இருந்து எங்கள் கட்சியின் பெயரை அகற்ற வேண்டும்" என்றார் பிரசண்டா.
இந்நிலையில், நேபாள புதிய அரசுடன் தொடர்ந்து நட்புறவை பராமரிப்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குடன் இந்திய நேபாள நட்புறவு சங்கத்தின் தலைவரும், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான சரத்யாதவ் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் இடையே நீண்ட எல்லை அமைந்திருப்பதால் அந்த நாட்டுடன் நல்லுறவை பராமரிப்பது அவசியம் என்று இந்திய வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனன் சரத்யாதவிடம் எடுத்துரைத்திருந்தார்.
இதனிடையே, மாவோயிஸ்டுகள் தலைமையிலான அரசில் சேர வேண்டுமா என்பது குறித்து பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலாவின் நேபாள காங்கிரஸ் கட்சியின் மத்திய செயற்குழு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.