காலி கராப்பிட்டி ஆஸ்பத்திரியில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த அம்புலன்ஸ் வாகனம் விபத்தில் சிக்கியதால் அம்புலன்ஸில் பயணம் செய்த பிரியந்த இந்திராகாந்தி (32 வயது) என்ற பெண் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
4 வயதுக் குழந்தை ஒன்றிற்கு இருதயத்தில் துவாரம் இருப்பதாகக் கூறி மேலதிக சிகிச்சைக்காக அம்புலன்ஸ் வாகனத்தில் கொழும்புக்கு தாயாருடன் வெள்ளிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.
அகுங்கல்ல என்ற இடத்தில் இந்த அம்புலன்ஸ் வாகனத்துடன் கனரக வாகனம் ஒன்று நேருக்குநேர் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றது.
இதன்போது அக்குழந்தையுடன் கூடச்சென்ற தாயாரே உயிரிழந்துள்ளார்.
சாரதியும் தாதி ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர். கனரக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.