வட்டவளை கரோலினா தோட்டத்துக்கு அருகில் நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;
" யட்டியாந் தோட்டையிலிருந்து அட்டன் போடைஸ் தோட்டத்துக்கு விறகுக் குற்றிகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று அந்த விறகுக் குற்றிகளை இறக்கி விட்டு திரும்புகையில் வட்டவளை கரோலினா தோட்டத்துக்கு அருகில் பிரதான பாதையை விட்டு விலகி 20 அடி பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது.
இதனைக் கண்ணுற்ற பிரதேச மக்கள் லொறிச் சாரதியினையும் உதவியாளரையும் மீட்டு உடனடியாக வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இதன் பின்பு தலையில் கடும் காயத்துக்குள்ளாகிய லொறியின் உதவியாளர் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றார். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.