சிலாபம்- மதுரங்குளம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்புத் தேடுதலின்போது வட, கிழக்குப் பகுதியைச் சேர்ந்த மூன்று தமிழ் யுவதிகளும் அதே பகுதியைச் சேர்ந்த இரு தமிழ் இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.
மூன்று யுவதிகளும் தமது உறவினர்களைச் சந்திக்க வந்ததாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்தது.
இரு தமிழ் இளைஞர்களும் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் ஆட்டோ சாரதி எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். ஏனையவர்கள் விசாரணையின் பின்னர் நேற்று சனிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர்.