|
15 நாட்களுக்கு முன் காணாமல்போன பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஹக்மன பகுதியில் இடம்பெற்றுள்ளது. சூரியவெவ பகுதியைச் சேர்ந்த இப்பெண் ஆட்டோவில் இங்கு வந்து, இங்குள்ள நீர் வீழ்ச்சியில் குளித்ததாகவும் அதன் பின்னர் காணாமல்போனதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
காட்டுப் பகுதிக்கு விறகு வெட்டச் சென்றவர்கள் அழுகிய நிலையில் இச்சடலத்தைக் கண்டு பொலிஸாருக்குத் தகவல் கொடுத்திருந்தனர். 48 வயதுடைய இப்பெண்ணின் மரணவிசாரணைக்காக மாத்தறை ஆஸ்பத்திரி சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. |