Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, April 27, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
போலி கடவுச்சீட்டுக்களுடன் 11 பேர் சென்னை விமான நிலையத்தில் தடுத்து வைப்பு
[27 - April - 2008] [Font Size - A - A - A]
*மூவர் இலங்கையர்கள், 8 பேர் இந்தியர்

போலிக்கடவுச்சீட்டுகள், பிரயாண ஒழுங்குப் பத்திரங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சென்னை விமான நிலையத்தில் இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 11 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கே போலியான கடவுச்சீட்டுகள், ஆவணங்களுடன் பயணம் செய்ய முயன்றதாக இவர்கள் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையர்கள் சென்னைக்கு வந்து போலி ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு மலேசியா அல்லது சிங்கப்பூருக்கு செல்வதாகவும் அங்கிருந்து அமெரிக்கா, கனடாவுக்கு செல்ல முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த புதன்கிழமை இரவு விமான நிலைய குடிவரவுத் துறை அதிகாரிகள் 3 இலங்கையரைத் தடுத்து வைத்துள்ளனர்.

யோகராஜா வசந்தராசன் (35 வயது) என்பவரை ரொரொன்டோவுக்குச் செல்லும் விமானத்தில் ஏறுவதற்கான அனுமதிச்சீட்டுடன் அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர். அவருடைய நண்பரான அச்சுதன்பிள்ளை பாலச்சந்திரனும் (35 வயது) மலேசியா செல்வதற்காக வந்தபோது தடுத்து வைக்கப்பட்டார். விமான நிலைய அதிகாரிகள் அச்சுதன்பிள்ளையை சோதனையிட்டபோது அவர் யோகராஜாவின் கடவுச்சீட்டை வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. தனது விமானத்தில் ஏறுவதற்கான அனுமதிச்சீட்டை மாற்றிக்கொண்டு ரொரொன்டோ செல்லும் விமானத்தில் ஏற அவர் முயற்சித்துள்ளார்.

மூன்றாவது நபரான தர்மராஜா தேவநாதன் (26 வயது) நவரட்ணம் பாலேந்திரன் என்பவருக்கு சொந்தமான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கோலாலம்பூருக்குச் செல்ல முயற்சித்துள்ளார்.

இவர்கள் மூவரும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் லோரன்ஸ் கிறிஸ்ரி, தி.இளவரசு ஆகிய இருவர் (சென்னைவாசிகள்) மோசடியான முறையில் இந்தியக் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொண்டு வியாழன் இரவு கோலாலம்பூருக்குச் செல்ல முயன்றபோது விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். அதே இரவு கோலாலம்பூரிலிருந்து சென்னைக்குப் போலி ஆவணங்களுடன் திரும்பிவந்த தாரணி ஆரோக்கியம் (33 வயது), ஆரோக்கியம் (42 வயது) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை, வெள்ளிக்கிழமை இரவும் கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு புகைப்படங்களை மாற்றி ஒட்டிக் கொண்டு பயணம் செய்த மூவர் பிடிபட்டுள்ளனர்.

Email this page Your Opinion Print this page
சகலரையும் புலிகளாக எண்ணி அரசு ஒட்டுமொத்தமாக தமிழர்மீது தாக்குதல்
மடுவை அமைதி வலயமாக்க இறை ஆசி வேண்டி கத்தோலிக்க ஆலயங்களில் விசேட வழிபாடுகள்
மணலாறில் முன்னேற படையினர் முயற்சி
கிழக்குத் தேர்தலின் பின் வடமேல் மாகாண சபைக்கு வாக்களிப்பு நடத்த திட்டம்
சிக்குன்குனியா, டெங்கு நோயாளரால் நிரம்பி வழியும் ஆஸ்பத்திரிகள்
கிழக்கில் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டிவிட அரசு முயற்சி
இலங்கையிலிருந்து பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்பட்ட நாய்க்குட்டி கடித்த மூவருக்கு விசர்நாய்க்கடி சிகிச்சை
ஈரான் ஜனாதிபதி நாளை விஜயம்
தேவை அதிகரிப்பு, விநியோகத்தில் இறுக்கம் எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம்
உணவு, எரிபொருள், மருந்துப் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிப்பதில் தாமதம்
யாழ். மாவட்ட இராணுவத் தளபதியுடன் மாவை சேனாதிராஜா சந்திப்பு
`இலங்கை மோதல்கள், தொடர்பாக கனடா விழித்தெழ வேண்டியது அவசியம்'
பஸ் மரத்துடன் மோதியதில் 11 பயணிகள் காயம்
மன்னாரில் ஒருவர் சுட்டுக் கொலை
மடுமாதா திருச்சொரூபத்தை கொலு வைப்பது உடனடியாக சாத்தியம் இல்லை என்கிறார் ஆயர்
ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க காயமடைந்து சிகிச்சை பெறும் படையினருடன் சந்திப்பு
`போர் நடவடிக்கைகள் மூலம் ஒருபோதும் எந்தவொரு தீர்வையும் எவரும் காணமுடியாது'
சிலாபம் துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் காயம்
பொதுநலவாய அமைப்பின் செயலாளர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுடன் சந்திப்பு
குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களை பிரதமர் ரட்ணசிறி நேரில் சென்று பார்வை
மயிலம்பாவெளியில் இளைஞர் சுட்டுக்கொலை
தோட்டத் தொழிலாளர்களுக்கும் 20 சதவீத சம்பளவுயர்வை வழங்க அரசு முன்வர வேண்டும்
ஐ.தே.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் பொருட்டு கட்சியை சார்ந்தவர்கள் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம்
திருமலையில் மலேரியா காய்ச்சல் பரவாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
தமிழ் பேசும் சமூகங்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி குளிர்காய நினைப்போருக்கு பாடம் புகட்ட வேண்டும்
தெற்கில் மினிசூறாவளி, இடிமின்னல், மழை ஒருவர் பலி, வீடுகள் சேதம், மின்சாரம் துண்டிப்பு
போலி கடவுச்சீட்டுக்களுடன் 11 பேர் சென்னை விமான நிலையத்தில் தடுத்து வைப்பு
ஐரோப்பியரிடம் இழந்த உரிமையை வென்றெடுக்க அனைத்து தமிழர்களும் ஒருமித்து பாடுபட வேண்டும்
காணாமல்போன பெண் சடலமாக காட்டில் மீட்பு
தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்
மதுரங்குளம் பகுதியில் ஐந்து தமிழர்கள் கைது
வட்டவளை கரோலினா தோட்ட வாகன விபத்தில் இருவர் படுகாயம்
அம்புலன்ஸ் விபத்தில் சிக்கி பயணம் செய்த பெண் பலி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com