கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐ.தே.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் பொருட்டு கட்சியின் மாத்தளை மாவட்ட அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் அலுவிகார, மாத்தளை தொகுதி அமைப்பாளரும் மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான வசந்த அலுவிகார ஆகியோர் அடுத்த வார நடுப்பகுதியில் கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
பாராளுமன்ற உறப்பினர்கள் ரஞ்சித் அலுவிகார கலேவெல, பள்ளேபொல, நாவுல, தம்புள்ள, லக்கல, வில்கமுவ ஆகிய பிரதேச சபைகளைச் சேர்ந்த உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் சகிதம் மட்டக்களப்பு மாவட்டத்துக்குச் சென்று அங்கு போட்டியிடும் ஐ.தே.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளனர்.
வசந்த அலுவிகார மாத்தளை யடவத்தை, உக்குவளை, இரத்தோட்டை பிரதேச சபைகளிலும் மாத்தளை மாநகர சபையிலும் அங்கம் வகித்து வரும் மக்கள் பிரதிநிதிகள் சகிதம் அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம்செய்து அங்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டவுள்ளார்.
இவர்கள் சுமார் ஒரு வாரகாலம் அப்பகுதியில் தங்கியிருந்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.