Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, April 27, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
தோட்டத் தொழிலாளர்களுக்கும் 20 சதவீத சம்பளவுயர்வை வழங்க அரசு முன்வர வேண்டும்
[27 - April - 2008] [Font Size - A - A - A]
*இ.தொ.ஐ.மு. வேண்டுகோள்

தனியார்துறை ஊழியர்களுக்கு அரசாங்கம் முன்மொழியவுள்ள 20 வீத சம்பள அதிகரிப்பை தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்கும் வகையில் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் உபதலைவர் கணபதி கனகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது;

வழமையாக தனியார்துறை தொழிலாளர்களுக்கு சம்பளவுயர்வு வழங்கப்படும்போது கூட்டு ஒப்பந்தத்தைக் காரணங்காட்டி தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படுவதில்லை.

ஆனால், கடந்த வருடம் செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதே ஜனாதிபதியின் தலையீட்டின் கீழ் 30 ரூபா சம்பளவுயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நாளாந்தம் அதிகரித்துச் செல்லும் அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வினால் அவதியுறும் தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போதைய நிலையில் சம்பளவுயர்வு அத்தியாவசியமாகின்றது.

இந்நிலையில் தனியார்துறையினருக்கு 20 வீத சம்பளவுயர்வினை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதேபோல், தோட்டத் தொழிலாளர்களுக்கும் சம்பளவுயர்வை வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Email this page Your Opinion Print this page
சகலரையும் புலிகளாக எண்ணி அரசு ஒட்டுமொத்தமாக தமிழர்மீது தாக்குதல்
மடுவை அமைதி வலயமாக்க இறை ஆசி வேண்டி கத்தோலிக்க ஆலயங்களில் விசேட வழிபாடுகள்
மணலாறில் முன்னேற படையினர் முயற்சி
கிழக்குத் தேர்தலின் பின் வடமேல் மாகாண சபைக்கு வாக்களிப்பு நடத்த திட்டம்
சிக்குன்குனியா, டெங்கு நோயாளரால் நிரம்பி வழியும் ஆஸ்பத்திரிகள்
கிழக்கில் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டிவிட அரசு முயற்சி
இலங்கையிலிருந்து பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்பட்ட நாய்க்குட்டி கடித்த மூவருக்கு விசர்நாய்க்கடி சிகிச்சை
ஈரான் ஜனாதிபதி நாளை விஜயம்
தேவை அதிகரிப்பு, விநியோகத்தில் இறுக்கம் எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம்
உணவு, எரிபொருள், மருந்துப் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிப்பதில் தாமதம்
யாழ். மாவட்ட இராணுவத் தளபதியுடன் மாவை சேனாதிராஜா சந்திப்பு
`இலங்கை மோதல்கள், தொடர்பாக கனடா விழித்தெழ வேண்டியது அவசியம்'
பஸ் மரத்துடன் மோதியதில் 11 பயணிகள் காயம்
மன்னாரில் ஒருவர் சுட்டுக் கொலை
மடுமாதா திருச்சொரூபத்தை கொலு வைப்பது உடனடியாக சாத்தியம் இல்லை என்கிறார் ஆயர்
ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க காயமடைந்து சிகிச்சை பெறும் படையினருடன் சந்திப்பு
`போர் நடவடிக்கைகள் மூலம் ஒருபோதும் எந்தவொரு தீர்வையும் எவரும் காணமுடியாது'
சிலாபம் துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் காயம்
பொதுநலவாய அமைப்பின் செயலாளர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுடன் சந்திப்பு
குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களை பிரதமர் ரட்ணசிறி நேரில் சென்று பார்வை
மயிலம்பாவெளியில் இளைஞர் சுட்டுக்கொலை
தோட்டத் தொழிலாளர்களுக்கும் 20 சதவீத சம்பளவுயர்வை வழங்க அரசு முன்வர வேண்டும்
ஐ.தே.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் பொருட்டு கட்சியை சார்ந்தவர்கள் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம்
திருமலையில் மலேரியா காய்ச்சல் பரவாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
தமிழ் பேசும் சமூகங்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி குளிர்காய நினைப்போருக்கு பாடம் புகட்ட வேண்டும்
தெற்கில் மினிசூறாவளி, இடிமின்னல், மழை ஒருவர் பலி, வீடுகள் சேதம், மின்சாரம் துண்டிப்பு
போலி கடவுச்சீட்டுக்களுடன் 11 பேர் சென்னை விமான நிலையத்தில் தடுத்து வைப்பு
ஐரோப்பியரிடம் இழந்த உரிமையை வென்றெடுக்க அனைத்து தமிழர்களும் ஒருமித்து பாடுபட வேண்டும்
காணாமல்போன பெண் சடலமாக காட்டில் மீட்பு
தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்
மதுரங்குளம் பகுதியில் ஐந்து தமிழர்கள் கைது
வட்டவளை கரோலினா தோட்ட வாகன விபத்தில் இருவர் படுகாயம்
அம்புலன்ஸ் விபத்தில் சிக்கி பயணம் செய்த பெண் பலி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com