பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை நேற்று சனிக்கிழமை அலரி மாளிகையில் சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
பொதுநலவாய இளைஞர் விவகார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சர்மா நேற்று இலங்கை வந்தடைந்தார்.
பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகமாக இந்தியாவைச் சேர்ந்த ஒருவரை நியமிப்பதற்கான முதல் பிரேரணையை இலங்கையே பிரேரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பொதுநலவாய செயலாளருக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான நேற்றைய கலந்துரையாடலில் முக்கிய பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கோஹன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, கொழும்புக்கான இந்தியத் தூதுவர் ஆலோக் பிரசாத்தும் கலந்துகொண்டுள்ளனர்.