சிலாபம் பொலிஸ் பிரிவில் நேற்று சனிக்கிழமை இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
வடமேல் மாகாண சபையின் உறுப்பினர் ஒருவரின் மெய்ப்பாதுகாவலர்கள் சிலரும் ஆதரவாளர் ஒருவருமே இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நான்கு பேரும் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.