மாத்தறையில் இருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் தனியார் பஸ் சீதுவை தவூகம என்ற இடத்தில் நேற்று சனிக்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளானது.
இச்சம்பவத்தில் பஸ்ஸில் பயணம் செய்தவர்களில் பதினேழு பேர் படுகாயமடைந்து ராகம ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பஸ் வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்து இடம்பெற்றதாக விசாரணைகள் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்துச் சம்பவம் குறித்த சீதுவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
மாத்தறையில் இருந்து கொழும்பு புத்தளம் வீதியூடாக இந்த பஸ்சேவை நடைபெற்று வருகிறது.