ஒட்டாவா: இலங்கையில் மோதல்களும் பயங்கரமான உயிரிழப்புகளும் இடம்பெற்றுக்கொண்டிருப்பதாகவும் அதனால் கனடாவின் வெளியுறவுக் கொள்கையில் விழிப்பு ஏற்பட வேண்டும் எனவும் அந்நாட்டின் தாராளவாத வெளியுறவுக் கொள்கை தொடர்பான விமர்சகர் வாப்ரே கூறியுள்ளார்.
உலகம் பேசாமல் அமர்ந்திருந்துகொண்டு உயிரிழப்புகள், அழிவுகள் இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்திருக்கும் ரே, ்இதுவொரு மனிதாபிமான அனர்த்தம் என்றும் இது தொடர்பாக கவனம் செலுத்துவது அவசியமெனவும் வலியுறுத்தியிருக்கிறார்.
இந்த வாரம் மோதலில் நூற்றுக்கணக்கானோர் இலங்கையில் பலியாகியுள்ளனர்.
முழுமையான யுத்த நிறுத்தத்தை மேற்கொண்டு பேச்சுவார்த்தைக்குத் திரும்புவதற்கான அழுத்தத்தை ஏனைய நாடுகளுடன் இணைந்து மேற்கொள்ளும் பணிகளில் கனடா ஈடுபட வேண்டுமெனவும் வாப்ரே கூறியுள்ளார். சம்மேளனங்களின் மாநாட்டுத் தலைவராக இருக்கும் வாப்ரே, முன்னர் இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளின்போது ஆலோசகராகவும் செயற்பட்டவராகும். புலிகள் பயங்கரவாதத்தைக் கைவிட வேண்டுமெனவும் இராணுவ நடவடிக்கையிலும் பார்க்க அரசியல் ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அவர் சிபார்சுகளை முன்வைத்திருக்கிறார்.
தனது வெளிவிவகார நிகழ்ச்சித் திட்டத்தில் மோதலை தடுப்பதற்கான நடவடிக்கைக்குக் கனடா முன்னுரிமை கொடுக்க வேண்டுமெனவும் இந்தத் துன்பியல் தொடர்பாக நாம் வேறுபட்ட ரீதியில் செயற்பட முடியாதெனவும் வாப்ரே கூறியிருக்கிறார்.