ஈரான்: ஜனாதிபதி அகமதி நிஜாத் நாளை திங்கட்கிழமை பிற்பகல் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறார்.
கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடையும் ஈரான் ஜனாதிபதி தலைமையிலான 70 பேர்கொண்ட குழுவினரை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வரவேற்பார் . அங்கு அவருக்கு அரச மரியாதையுடனான வரவேற்பு அளிக்கப்படும்.
திங்கட்கிழமை இரவு ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விருந்துபசாரத்திலும் கலந்து கொள்ளும் ஈரான் ஜனாதிபதி முக்கிய சில ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடுவார்.
மறுநாள் செவ்வாய்கிழமை காலை கலதாரி ஹோட்டலில் மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா தலைமையில் முஸ்லிம் பிரதிநிதிகளையும் ஈரான் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.
அத்துடன் உமா ஓயா நீர் மின்திட்ட நிர்மாணப் பணி மற்றும் சப்புகஸ்கந்த எரிபொருள் நவீனமயமாக்கும் திட்டத்தையும் ஈரான் ஜனாதிபதி அங்குரார்ப்பணம் செய்துவைப்பார். இந்நிகழ்வுகளில் ஜனாதிபதியுடன் அமைச்சர்களும் கலந்துகொள்ளவார்கள்.
அன்றைய தினம் பிற்பகலே ஈரான் ஜனாதிபதி தனது இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு இந்தியாவுக்கு புறப்பட்டுச் செல்வார்.