லண்டன் :இலங்கையிலிருந்து பிரிட்டனுக்குக் கொண்டு செல்லப்பட்ட நாய்க்குட்டி கடித்த மூவர் விசர்நாய்க்கடிச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக பிரிட்டிஷ் அரசாங்கம் நேற்று சனிக்கிழமை தெரிவித்தது.
இங்கிலாந்தின் தென்கிழக்குப் பகுதியில் தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்குரிய வசதிகளுடன் இருக்கும் கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த நாய்க்குட்டி பின்னர் இறந்து விட்டது.
ஆரம்பகட்ட பரிசோதனையின் போது விசர் நாய்க்கடிக்கான தன்மை இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டதாக சுற்றாடல், உணவு, கிராமப்புற விவகாரத் திணைக்களம் தெரிவித்தது. மூவருக்குத் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
அதேசமயம், அந்தக்கட்டிடத் தொகுதியில் இருந்த ஏனைய மிருகங்கள் வேறு இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.
விசர்நாய்க்கடி நோயானது (Rabies) நரம்புத்தொகுதியைப் பாதிக்கும் நோயாகும். இது சகல பாலூட்டிகளையும் தாக்கக்கூடியதாகும். இந்நோயால் பீடிக்கப்பட்ட விலங்குகளால் பிறாண்டப்பட்டால் அல்லது அந்த விலங்கு கடித்தால் உமிழ்நீர் மூலம் இந்நோய் பரவிவிடும்.
இதேவேளை, நாய்க்குட்டி கடித்ததால் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய மிருகங்களுக்குப் பரவும் அசாத்தியம் இல்லையெனவும் பிரிட்டிஷ் அரச மிருக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இந்த நாய்க்கடியை சோதனைசெய்தபோது, ஆரம்பக்கட்ட பரிசோதனையின் போது விசர்நாய்க்கடிக்குரிய குணாம்சங்கள் சாதகமான முறையில் காணப்பட்டன என்று, பதில் தலைமை மிருகவைத்தியர் அலிக் சிமொன்ஸ் ்டெப்ராீ இணையத்தளத்திற்கு தெரிவித்திருக்கிறார்.
ஏப்ரல் 18 இல் இந்த நாய்க்குட்டி பிரிட்டனுக்குக் கொண்டுவரப்பட்டது. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இறந்து விட்டது.