மணலாறு பகுதியில் நேற்று சனிக்கிழமை காலை படையினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சியைத் தாங்கள் முறியடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
மணலாறு மண்கிண்டிமலை மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதியிலேயே நேற்றுக் காலை 6 மணியளவில் இந்தப்படை நடவடிக்கை இடம்பெற்றதாகவும் அதனைத் தாங்கள் நீண்டநேர பதில் தாக்குதல் மூலம் முறியடித்துள்ளதாகவும் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்தார்.
இதன்போது படையினர் பலத்த இழப்புகளுடன் பின் வாங்கிச் சென்று விட்டதாகவும் அவர் கூறினார்.
இதையடுத்து அந்தப்பகுதியில் படையினர் கடும் ஷெல் தாக்குதலை மேற்கொண்டனர்.
இதேநேரம், மன்னார் மற்றும் வவுனியா பகுதியிலும் மோதல்கள் நடைபெற்றுள்ளன.