தந்தை செல்வாவின் 31ஆவது நினைவு தினமான நேற்று யாழ் நகரில் உள்ள அன்னாரின் சிலைக்கு அருட்தந்தை சு.ஜெபநேசன் அடிகளார் மலர்மாலை சூட்டி அஞ்சலி செலுத்துவதையும் மாவை சேனாதிராஜா எம்.பி. மலரஞ்சலி செலுத்துவதையும் இங்கு காணலாம்.
முகமாலை மற்றும் கிளாலிப் பகுதிகளில் அண்மையில் நடைபெற்ற மோதல் சம்பவங்களின் போது காயமடைந்து ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள படையினரை ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று பார்வையிட்டு அவர்களின் நிலைமை தொடர்பாகக் கேட்டறிவதை இங்கு காணலாம்.