அகில இலங்கை ரீதியில் பாடசாலை ஆண், பெண் அணிகளிடையே தனித் தனியாக கூடைப்பந்தாட்டப் போட்டியை, இலங்கை பாடசாலை கூடைப்பந்தாட்டச் சங்கம் மே மாதம் மொறட்டுவையிலும் நுகேகொடவிலும் நடாத்தவுள்ளது.
அகில இலங்கை ரீதியில் பாடசாலை ஆண்கள் - பி பிரிவு அணிகளிடையே, மொறட்டுவ பிரின்ஸ் ஒப்வேல்ஸ் கல்லூரி கூடைப்பந்தாட்டத் திடலில் மேமாதம் 9 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன.
இப்போட்டியில் மொத்தம் 24 அணிகள் பங்குபற்றுகின்றன. இவை 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும்.
19 வயது பாடசாலை பெண்கள் அணிகளிடையேயான போட்டி மேமாதம் 2 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை நுகேகொட சென்.ஜோசப் பெண்கள் கல்லூரி, கூடைப்பந்தாட்டத் திடலில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்குபற்றுகின்றன. இவை 5 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறுமென்று இலங்கை பாடசாலை கூடைப்பந்தாட்டச் சங்கம் அறிவித்துள்ளது.