இலங்கையில் உதைபந்தாட்டத் தரம் வளர்ச்சி அடைந்து வருவதாக சர்வதேச உதைபந்தாட்ட வாரியத்தின் (FIFA) தலைவர் ஜோசப் பிளட்டர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஆசிய கிண்ணத்துக்கான தகுதிகாண் போட்டி தாய்வானில் நடைபெற்றது. இப்போட்டியில், இலங்கை அணி, பாகிஸ்தான், குவாம், தாய்வான் அணிகளை வெற்றி பெற்று, அரையிறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளது.
இதனால், சர்வதேச உதைபந்தாட்டத் தரத்தில் இதுவரை 168 ஆவது இடத்தில் இருந்த இலங்கை தற்போது, 8 இடங்கள் முன்னேறி 160 ஆவது இடத்துக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
தெற்காசிய நாடுகளைப் பொறுத்த மட்டில் இலங்கை 1 ஆம் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.