Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, April 27, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
ரட்ணம் கழகம் அரையிறுதி ஆட்டத்துக்கு தெரிவாகும்
[27 - April - 2008] [Font Size - A - A - A]
இலங்கையில் முதல் தடவையாக நடைபெறும் ஆசிய தலைவர் கிண்ணத்துக்கான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் இலங்கையின் சார்பாகப் பங்குபற்றும் ரட்ணம் கழகம் அரை இறுதி ஆட்டத்துக்கு தெரிவாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இச்சுற்றுப் போட்டியில் ரட்ணம் கழகம் பங்குபற்றிய 1 ஆவx போட்டியில் பூட்டான் ரான்ஸ் போட் யுனைட்டெட் கழகத்தை மிக இலகுவாக 7-1 கோல்களினால் வெற்றி பெற்றது. கடந்த வருடம் நடைபெற்ற மேற்படி சுற்றுப் போட்டியிலும் ரட்ணம் கழகம் பூட்டான் அணியை 6-0 கோல்களினால் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

ரட்ணம் கழகம் தனது 2 ஆவது போட்டியில் மியன்மார் அணியை நிச்சயம் வெற்றி கொள்ளும் என்று அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

இன்று 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ரட்ணம் கழகம் துர்மெனிஸ்தான் அணியைச் சந்திக்கின்றது. துர்மெனிஸ்தான் அணி தனது 1 ஆவது போட்டியில் மியன்மார் அணியிடம் 1-0 கோலினால் தோல்வி அடைந்தது. இதன் அடிப்படையில் துர்மெனிஸ்தான் அணியை ரட்ணம் கழகம் இலகுவாக வெற்றிபெறும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இன்று 4 மணிக்கு நடைபெற இருக்கும் மற்றொரு ஆட்டத்தில் மியன்மார் அணி பூட்டான் அணியைச் சந்திக்கின்றது.

இச்சுற்றுப் போட்டியில் வெற்றிபெறும் அணியும் கூடிய புள்ளிகளைப் பெறும் 2 ஆவது அணியுமே அரை இறுதி ஆட்டத்துக்குத் தெரிவாகும் என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Email this page Your Opinion Print this page
ரட்ணம் கழகம் அரையிறுதி ஆட்டத்துக்கு தெரிவாகும்
இலங்கை உதைபந்தாட்ட அணிக்கு ஜோசப் பிளட்டர் பாராட்டு
பாடசாலைகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டம் மேயில் ஆரம்பம்
கருணாரட்ண, லக்ஷ்மன் டி அலவிஸ் ஆகியோரின் மரணம் விளையாட்டுத்துறைக்கு பெரும் இழப்பாகும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com