|
எம்.ஏ.எம்.நிலாம்
இதனைத் தொடர்ந்து அமைச்சர்களைப் பார்த்து முஸ்லிம் காங்கிரஸ் பேசியது, ்பெரிய கட்சிகளுடனான கூட்டு என்பது தேர்தலுக்கு முந்தி அமைவது ஒருவகை; தேர்தலுக்குப் பிந்தி அமைவது இன்னொரு வகை. இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை பெரிய கட்சியுடனான கூட்டாக இருந்தால் தேர்தலுக்குப் பிந்தி அமைவதே பொருத்தமானதாக இருக்கும். கிழக்கின் இன விகிதாசார செல்வாக்கு அடிப்படையிலும் கட்சிகளின் செல்வாக்கு அடிப்படையிலும் பார்க்கும் போது நாம் தனித்துப் போட்டியிட்டால் வேறு எந்தக் கட்சியும் ஆட்சியமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை ஆசனங்களைப் பெறுவது சாத்தியமில்லை. ஆகவே, தனித்துப் போட்டியிடுவதால் எமது பேரம் பேசும் சக்தி அதிகமாகிவிடும். இதன்மூலம் முஸ்லிம் முதலமைச்சருக்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெளிவுபடுத்தியது. மேலும், "உலகுக்கும் நாட்டுக்கும் முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளை தெரிவிக்கவும் முடியும். அத்தோடு, கிழக்கு முஸ்லிம் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கும் தாயக கோட்பாட்டுக்கும் ஒருங்கே ஒரு ஆணையையும் அங்கீகாரத்தையும் பெறுவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தும்" என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் விளக்கப்பட்டது.
இவ்வளவு நேரமும் மூர்ச்சையாகி அசைவற்றுக் கிடந்த' முஸ்லிம் கூட்டு முன்னணியும் சின்னமும்" என்ற கருப்பொருளுக்கு தண்ணீர் தெளித்து பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா கண்விழிக்கவைத்தார்.
`கூட்டு முன்னணி அமைப்பதற்கும் அதன் சின்னம் பற்றி முடிவு செய்வதற்குமான கூட்டத்தை எல்லோருடைய பங்குபற்றுதலுடன் பாராளுமன்றத்தில் நடத்துவது என்று தீர்மானித்தே `உம்மா' அமைப்பினர் என்னை அழைத்தனர். சரியான விடயத்துக்கு வாருங்கள், இல்லாவிட்டால் நான் எழுந்து செல்கிறேன்" என்று மயோன் முஸ்தபா கூறியபோதுதான், உடனடியாக ்உம்மாீ விழித்துக் கொண்டது.
`நாம் விடயத்துக்கு வருவோம்' என்று `உம்மா' பிரமுகர்கள் கூட்டத்தை சரியான திசைக்குத் திருப்பினர். மீண்டும் அமைச்சர்களின் கோரஸுடன் ்முஸ்லிம் கூட்டு முன்னணியும் சின்னமும்ீ என்ற தலைப்பில் கலந்துரையாடப்பட்டது. ஆனாலும், ்உம்மாீ அமைப்பினர் கட்சிகளுடன் தனித்தனியாக பேசியபோது கட்சிகள் தெரிவித்த கருத்துக்களே மீண்டும் அங்கு பேசப்பட்டது.
இறுதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது. அதில் விட்டுக்கொடுப்பும் மன்றாட்டமும் கலந்திருந்தது. `நாங்கள் முஸ்லிம் கூட்டு முன்னணிக்குத் தயார். முதலமைச்சர் பதவியையும் முஸ்லிம் காங்கிரஸ் அல்லாத வேறு கட்சிக்கு விட்டுத்தரத் தயார். மரச்சின்னத்தை மட்டும் நீங்கள் விட்டுத் தாருங்கள்ீீ என்று முஸ்லிம் காங்கிரஸ் மன்றாடியது. இதற்காக முன்னர் சொன்ன நியாயங்களையும் யதார்த்தங்களையும் சட்டப் பிரச்சினைகளையும் அது முன்வைத்தது.
ஆனால், அரசிலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் நுஆவிலோ அல்லது நஸீர் ஹாபிஸுடைய கட்சியிலோ போட்டியிடும் அபிப்பிராயத்தையே தொடர்ந்தும் கொண்டிருந்தார்கள். முஸ்லிம் காங்கிரஸ் அவ்வாறான அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கவில்லை. அந்தவேளை முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதையே அபிப்பிராயமாகக் கொண்டிருந்தது. கூட்டத்தில் சம்பந்தப்படாவிட்டாலும் தனித்துப் போட்டியிடுவது என்ற அப்போதைய நோக்கத்தை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கலந்துகொண்டோர் முஸ்லிம் அமைச்சர்களுடன் நட்பு அடிப்படையில் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். இறுதியில் எந்த முடிவும் இல்லாமலேயே கூட்டம் முடிவடைந்தது. |