மொரோக்கோவின் கஸாபலன்கா நகரில் இடம்பெற்ற தீ விபத்தொன்றில் 55 பேர் பலியாகியுள்ளனர்.
இங்குள்ள மெத்தை தயாரிப்பு தொழிற்சாலையொன்றின் கீழ்த்தளத்தில் பரவிய தீயினால் மேலும் 12 பேர் கடுமையான காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
இத் தொழிற்சாலையில் இரசாயனப் பொருட்கள் களஞ்சியப் படுத்தப்பட்டிருந்ததன் காரணமாக விரைவில் பரவிய தீயைக் கட்டுப்படுத்தவதற்காக சுமார் நூற்றுக்கும் அதிகமான தீயணைப்புப்படை வீரர்கள் தீயுடன் போராடியதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபத்துக்கான காரணத்தைக் கண்டறிவதற்கான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
கட்டடத்தின் உட்பகுதியை சென்றடைவதற்கு தீயணைப்பு படைவீரர்களுக்கு பலமணிநேரம் எடுத்ததாக நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ் விபத்து இடம்பெற்ற சமயம் 100 தொழிலாளர்கள் வரையில் இத்தொழிற்சாலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.