கிழக்கு மாகாணசபை தேர்தலை மே மாதம் 10 ஆம் திகதி திட்டமிட்டபடி நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்ட நிலையில், விஷேட உயர்மட்ட மாநாடு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்-அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்றது.
இந்த மாநாட்டில் உதவித்தேர்தல் ஆணையாளர் ரி.எஸ். கிருஷ்ணானந்தலிங்கம் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள், மின்சார, போக்குவரத்து, கல்வித் திணைக்கள அதிகாரிகள், திணைக்கள கூட்டுத்தாபனத் தலைவர்கள், படை அதிகாரிகள் என பலதரப்பட்டோர் கலந்து கொண்டனர்.
தேர்தல் தினத்தன்று மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள், குறிப்பாக வாக்கெடுப்பு நிலையங்கள், வாக்கு எண்ணும் நிலையங்கள், போக்கு வரத்துவசதிகள், இடம்பெயர்ந்தவர்களுக்காக ஏற்படுத்தப்படும் மேலதிக வாக்களிப்பு நிலையங்களை அமைப்பதுடன், ஏனைய குறைபாடுகள் பற்றி ஆராயப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஏற்புடைய அறிவுரைகள் அரச அதிபர் அருமைநாயகத்தால் வழங்கப்பட்டது.
வாக்குகளை எடுத்துச்செல்வதற்காக இலங்கை போக்குவரத்து சாலைகளிலிருந்து 70 பஸ்களை பெறுவதென்றும் தீர்மானம் எடுக்கப்பட்டது.