வடக்கே மோதல் சம்பவத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் ஏழுபேரின் சடலங்கள் சனிக்கிழமை சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் ஊடாக வன்னிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த சடலங்கள் வவுனியா ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டு மரண விசாரணையும் நடத்தப்பட்டது.
வவுனியா பகுதியில் இடம்பெற்ற மோதலில் இருவரும் வெலிஓயா பகுதி மோதலில் ஐவருமாக ஏழு விடுதலைப்புலிகள் உயிரிழந்துள்ளதாக படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டு வவுனியா ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டிருந்தன.