கட்டுநாயக்கா அதியுயர் பாதுகாப்பு வலயப்பகுதியில் உள்ள கல்கஸ்தொட என்ற இடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி முதல் காலை 8 மணிவரையும் தேடுதல் சுற்றிவளைப்பு இடம்பெற்றது.
விமானப்படையினரும், பொலிஸாரும் இணைந்து நடத்திய இந்த நடவடிக்கையில் 24 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒரு தமிழ் இளைஞனும், ஒரு தமிழ் யுவதியும் அடங்குவார்கள்.
இங்குள்ள விடுதிகள், தொழிலாளர் தங்குமிடங்கள் என்பன தீவிரமாக சோதனையிடப்பட்டன.
கட்டுநாயக்காவில் உள்ள தொழிற்சாலைகளில் இவர்கள் பணிபுரிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் தமது வதிவிடத்தை உறுதிப்படுத்தாததன் காரணத்தால் விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரேமசிறி விதாரணவின் தலைமையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.