Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, April 28, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
யுத்தத்துக்கு இந்தியா 1100 கோடிரூபா இலங்கை அரசாங்கத்திற்கு நிதி உதவி
[28 - April - 2008] [Font Size - A - A - A]
இலங்கையின் பாதுகாப்புத் துறையினர் ஆயுதங்கள், போர்த் தளபாடங்களை கொள்வனவு செய்வதற்காக 100 மில்லியன் டொலர்களை (இந்திய ரூபா 400 கோடி, இலங்கை ரூபா சுமார் 1100 கோடி) குறைந்த வட்டியிலான கடனாக இந்தியா வழங்கவுள்ளதாக எக்கனோமிக் ரைம்ஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

குறைந்த மட்டத்திலான வளர்ச்சியடைந்த நாடுகளின் தரத்தில் இலங்கை இல்லையென்ற போதிலும், 2 சதவீத வட்டி வீதத்தில் அதிகளவு சலுகையுடன் கடனை வழங்குவதற்கு இந்தியா இணங்கியுள்ளது.

இலங்கையின் தரத்திலுள்ள நாடொன்றுக்கு கடன் வழங்கும் போது சாதாரணமாக லண்டன் வங்கிகள் வழங்கும் வட்டிவீதத்துடன் 1-2% சதவீதத்தை அறவிடுவது வழமையாகும்.

இதேவேளை, ரயில் பாதை அபிவிருத்தித் திட்டங்களுக்காக மற்றொரு தொகையாக 100 மில்லியன் டொலர்களையும் இலங்கை இந்தியாவிடமிருந்து பெற்றுக் கொள்ளவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

2008 நிதியாண்டுக்காக இரு தரப்பு வட்டி வீதம் குறைந்த சலுகைக் கடன்களை வழங்குவதற்கு 500 மில்லியன் டொலர்களையே இந்தியா ஒதுக்கீடு செய்துள்ளது. இத் தொகையுடன் ஒப்பிடும் போது இலங்கைக்கு 200 மில்லியன் டொலர்களை சலுகைக் கடனாக வழங்குவது ஒப்பீட்டளவில் பாரிய தொகையெனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயத்தை இந்திய வெளிவிவகார அமைச்சின் முதலீட்டு வர்த்தக மேம்பாட்டுப் பிரிவு இதுவரை கையாள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியான உணர்வுகளுக்கு இடமளிக்கும் இந்த விடயம் குறித்து அதிகாரி ஒருவரும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

இந்த நிதிவளத்தை விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு முக்கியமாக இலங்கை பயன்படுத்தும்.

இந்தியாவின் இந்த நடவடிக்கையானது விடுதலைப் புலிகளை மறைமுகமாக அழிப்பதற்கான மற்றொரு முயற்சியாக நோக்கப்படுகிறது.

இந்த மாதிரியாக பாரிய அளவில் இலங்கை இராணுவத்துக்கு இந்தியா உதவும் திட்டத்தை இந்திய ஆளும் ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசியல் பலம் பொருந்திய பங்காளியாக இருக்கும் தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் விரும்புவதற்கான சாத்தியம் இல்லையெனக் கூறப்படுகிறது.

இதேவேளை, இந்தியாவின் முன்னணி பாதுகாப்பு விவகார ஆய்வாளர் சி.உதே பாஸ்கர் புதுடில்லியின் இந்த நடவடிக்கைக்கு சாதகமான கருத்தை தெரிவித்துள்ளார். ்கொள்கையளவில் இதற்கு நான் ஆதரவளிக்கிறேன். இலங்கைக்கோ நேபாளத்திற்கோ இராணுவ உதவி தேவைப்பட்டால் நாங்கள் தான் முதலில் செல்பவர்களாக இருக்க வேண்டும்.

இல்லாவிடில் அமெரிக்காவோ, சீனாவோ அல்லது வேறு எந்த நாடோ அந்த இடைவெளியை நிரப்பிவிடும். அவ்வாறு நடைபெற்றால் கேந்திர உபாய ரீதியாக அது பிரதிகூலமான விடயமாக எமக்கு (இந்தியாவுக்கு) அமையும் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

Email this page Your Opinion Print this page
இலங்கை, ஈரான் ஜனாதிபதிகள் இன்று இரவு இருதரப்பு பேச்சு
யுத்தத்துக்கு இந்தியா 1100 கோடிரூபா இலங்கை அரசாங்கத்திற்கு நிதி உதவி
8 இராணுவத்தினர், 35 புலிகள் மணலாறு மோதலில் பலி; 45 பேர் படுகாயம்
கட்டுநாயக்காவில் தேடுதல் 24 பேர் கைது
10 இலட்சம் மக்கள் கடும் பஞ்சத்தை எதிர்கொள்ளும் அவலம்
மேற்குலகை சாடுகிறார் கலாநிதி ஹோகண
மன்னார் குரு முதல்வர் மடுவுக்கு சென்றார்
பயணிகள் பஸ் மீதான குண்டுத்தாக்குதலை தடுத்து நிறுத்துவது குறித்து உயர்மட்ட மாநாடு
சமாதானப் பேச்சுவார்த்தை முறிவடைந்த 2 1/2 வருடங்களில் 9 ஆயிரம் படையினர் பலி
அமைச்சர் ஜெயராஜ் படுகொலைச் சம்பவம் சிங்களவர்களுக்கும் தொடர்புள்ளதாக தெரிவிப்பு
கட்டானை தொகுதி சு.க. மத்திய குழு தலைவியாக ஜெயராஜின் மனைவி
இலங்கை - இந்திய ஒப்பந்தம் முஸ்லிம்களின் முதுகில் எழுதப்பட்டுள்ள அடிமைச்சாசனம்
தொழிலாளர்களின் உரிமையை வலியுறுத்தி மேதினமன்று தோட்டங்களில் பிரார்த்தனை நடத்துவதற்கு ஏற்பாடு
ஐ.தே.க. வேட்பாளர்களை ஆதரிக்கும் பிரசாரம் கிழக்கில் சூடுபிடிப்பு
விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல் வர்த்தகர்களால் பதுக்கி வைக்கப்படுவதாக முறையீடு
இரத்தினபுரி மாவட்டத்தில் சிக்குன் குன்யாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள்
டாக்டர்கள், தாதிமாருக்கு வைரஸ் காய்ச்சல்
மஸ்கெலியாவில் திடீர் சுற்றிவளைப்பு; மூவர் கைது
கல்முனை மாநகராட்சி மன்றத்தின் புதிய உறுப்பினர்களாக ஐவர் பதவியேற்பு
இராணுவ வீரரின் வீட்டில் யன்னல் உடைத்து கொள்ளை
யக்கலை சந்தையில் இளைஞர் சுட்டுக்கொலை
குளவி கொட்டியதில் அறுவர் படுகாயம்
மகியங்கனை வாகன விபத்தில் மூவர் படுகாயம்
கதிர்காமம் முருகன் ஆலய திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு
ஏழு சடலங்கள் வன்னிக்கு அனுப்பிவைப்பு
பிலியந்தல பஸ் குண்டுவெடிப்பு சம்பவம் 19 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை
ஓட்டுமடத்தில் உடல் கருகியநிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு
அமைச்சர் ஜெயராஜ் முன்னெடுத்த வேலைத்திட்டங்களை அர்ப்பணிப்புடன் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வேன்
மடுத்தேவாலய பிரதேசத்திற்கு நேற்று அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ விஜயம்
திருகோணமலை நகரில் கிளைமோர் குண்டு மீட்பு
சர்வதேச இளைஞர்கள் தினம் - 2008 சான்றிதழ் வழங்குவதற்கான விபரம் கோரல்
அட்டாளைச்சேனையில் முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் எழுச்சிப் பேராளர் மாநாடு
அப்புத்தளை வர்த்தகரினால் தாக்குதலுக்குள்ளான இரு தோட்டத் தொழிலாளர் வைத்தியசாலையில் அனுமதி
விரும்பாத தேர்தல் முடிவை முஸ்லிம் சமூகத்தின் மீது திணிக்க சதி நடப்பதாக கூறுகிறார் ஹசன் அலி
இலங்கை பிரச்சினை தொடர்பான தமிழக சட்டசபையின் தீர்மானம் காலத்தின் கட்டாயம்
வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு மாவட்ட நீதிவான் பாராட்டி கௌரவிப்பு
இறங்குதுறைப்பக்கமாகவிருந்து இராணுவத்தினர் சுட்டவாறு வந்தனர் அக் ஷன்பாம் ஊழியரை எம்மோடு வருமாறு கேட்டபோதும் வரவில்லை
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.கட்சி வெற்றியை எவராலும் தடுக்க முடியாது
முஸ்லிம் தலைமைகள் பதவிமோகத்தை கைவிட்டு ஜனாதிபதியின் தலைமையின் கீழ் அணிதிரள வேண்டும்
அரச அதிபரால் நடத்தப்பட்ட கிழக்கு தேர்தல் தொடர்பான உயர்மட்ட மாநாடு
`முஸ்லிம் சமூகத்தை பிளவுபடுத்தும் முயற்சியிலேயே இன்றைய அரசு மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றது
கிழக்கு மாகாண முதலமைச்சராக முஸ்லிம் ஒருவரை நியமிக்க அனைவரும் ஒன்றுபட்டு வாக்களிக்க வேண்டும்
கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கான தபால் வாக்களிப்பு இன்று ஆரம்பம்
சாரதியின் கழுத்தை வெட்டி காயப்படுத்தி முச்சக்கர வண்டியை கடத்த முயற்சி
கோணமொட்டாவ தோட்டத்தில் வெட்டப்படும் மரங்களால் தொழிலாளர்கள் தொழிலை இழக்கும் அபாயம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com