ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்ட உத்தியோகத்தராகிய டொன்கேம்ப் அண்மையில் ஷ்ரீலங்காவுக்கு மேற்கொண்ட விஜயம் இலங்கை அரசின் செயற்பாடுகளின் பிரதிபலனாக ஏற்பட்டதும் பாதிக்கக்கூடியதுமான ஒரு முக்கிய நிகழ்ச்சி என பல்வேறு வெளிநாட்டு ஊடகங்களும் கருத்து தெரிவித்துள்ளன.
ஐக்கிய அமெரிக்காவின் `நம்பர் வண்' எதிரியாகிய ஈரானின் ஆட்சித் தலைவர் அஹமட் நிஜாத் இலங்கைக்கு விஜயம் செய்வதற்குத் திட்டமிட்டுள்ள நிலையில் ஐக்கிய அமெரிக்க அரசின் பிரதிநிதியாக இராஜாங்கத்திணைக்களத்தின் தலைமை உத்தியோகத்தர் ஒருவரை விசேட பிரதிநிதியாக இலங்கைக்கு அனுப்பியிருப்பது அண்மைக் காலங்களில் ஈரானும் ஷ்ரீலங்காவுக்குமிடையே தோன்றி வரும் நெருக்கத்தின் பிரதிபலனாக ஏற்பட்ட சம்பவம் எனவும் இந்தநிலை அமெரிக்க - ஈரான் பிரச்சினை சம்பந்தமான ஷ்ரீலங்காவின் நிலைப்பாடு சம்மந்தமாக ஷ்ரீலங்காவில் சர்ச்சைகள் ஏற்பட்டிருப்பதை எடுத்துக் காட்டுவதாக அமைவதாகவும் கருத்துகளில் மேற்படி வெளிநாட்டு ஊடகங்களின் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அண்மையில் ஐக்கிய அமெரிக்க அரசின் விசேட பிரதிநிதியாக ஷ்ரீலங்காவுக்கு வந்திருந்த இராணுவத் திணைக்கள சிரேஷ்ட உத்தியோகத்தர் டொன் கேம்ப் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரியாக 30 ஆண்டுகளுக்கு முன்னரே அதாவது 1970 களில் பணியாற்றியவரும், ஷ்ரீலங்காவின் அரசியல் மற்றும் இன,மத, கலாசார விடயங்களில் நல்ல அனுபவத்தையும் விளக்கத்தையும் பெற்றவருமாவார். இவ்வாறு ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் அவரை விசேட விஜயத்தின் பேரில் அனுப்பியிருப்பதற்குக் காரணம் அண்மைக் கால இலங்கை - ஈரான் தொடர்பு சம்பந்தமாக அமெரிக்க அரசின் கருத்துக்களையும் எதிர்ப்பையும் தெரிவிப்பதற்கே என மேற்படி வெளிநாட்டு ஊடகங்களில் விமர்ச்சிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான வெளிநாட்டு ஊடகங்களின் அமெரிக்காவுக்குச் சார்பான சில ஊடங்களில் இதுபற்றித் தெரிவிக்கையில் ஈரான் தற்போது அமெரிக்காவுக்கு எதிராக வெளிநாடுகளை அணிதிரட்டும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளன. மேலும் ஈரானில் அணுசக்தி உற்பத்தி நிலையங்கள், மற்றும் அய்வுநிலையங்களைத் தொடர்ந்து இயங்க் வைக்க முடியாத அளவுக்கு அமெரிக்காவின் எதிர்ப்பும் எச்சரிக்கைகளும் விடப்படப்பட்டிருக்கும் நிலையிலும் இதனால் ஈரானுக்குள் அணுசக்தி சார்ந்த ஆய்வுகள் உற்பத்திகளை மேற்கொள்ள முடியாத நிலையிலும் ஈரான் அரசு வேறு ஏதேனும் ஒரு வெளிநாட்டை இதற்காகப் பயன்படுத்தும் உபாய மார்க்கத்தை கடைப்பிடிக்கம் செயற்பாடுகளில் இறங்கியிருப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் ஈரான் அரசு திட்டமிட்டு இலங்கை போன்ற பல்வேறு சிறிய நாடுகளுடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு அந்த நாடுகளை அமெரிக்க அரசுக்கு எதிராக சர்வதேச அரங்கில் செயற்படவைப்பதற்கும் அதன் மூலம் ஈரான் அரசுக்கும் அதன் அணுசக்தி ஆய்வுகள் மற்றும் உற்பத்தித் திட்டங்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேசமெங்கும் ஆதரவைத் திரட்டுவதற்கும் முயன்று வருவதாக குறித்த அமெரிக்க சார்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறு அணுசக்தி ஆய்வு மற்றும் உற்பத்தி சம்பந்தமாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமிடையே சர்ச்சைகள் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையிலும் தற்போது ஈரானுடன் இலங்கை அரசும் ஈரானும் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்தி வரும் நிலையிலும் அண்மையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள சிரேஷ்ட அதிகாரியை அமெரிக்க அரசு விசேட தூதுவராக ஷ்ரீலங்காவுக்கு அனுப்பியிருப்பது மிக முக்கியமான நிகழ்வு எனச் சுட்டிக்காட்டும் வெளிநாட்டு ஊடகங்கள் குறித்த விசேட தூதுவர் டொன் கேம்ப் கொழும்பில் ஷ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் போகொல்லகமவைச் சந்தித்த சம்பவங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரதான செய்திகளை வெளியிட்டுள்ளன. அவற்றில் அமெரிக்க தூதுவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் இலங்கை ஜனாதிபதியின் சகோதரருமான கோதாபய ராஜபக்ஷவைச் சந்தித்தது பற்றியும், மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் சுகத கமலத் மற்றும் பிரதான அதிகாரிகளைச் சந்தித்தது பற்றியும் செய்திகளும் விமர்சனங்களும் குறித்து முக்கிய தலைப்புகளின் கீழ் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லங்காதீப வெளியீட்டு செய்தித்தாள் பகுதி 27.04.2008