ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்தை தாக்கிய விவகாரம் பெரும் பர பரப்படைந்துள்ள நிலையில், ஹர்பஜன் மற்றும் ஸ்ரீசாந்த் தங்களுக்குள் ஏற்பட்ட மோதலை மூடி மறைக்கப் பார்த்துள்ளனர்.
இது குறித்து ஸ்ரீசாந்த் கூறுகையில்; "காலையில் லேசான காய்ச்சலுடன் போட்டியில் கலந்துகொண்டேன். வெற்றி பெற்றதும் உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டேன். மற்றபடி ஹர்பஜன் என்னை அடித்தது போன்ற சம்பவம் நடக்கவில்லை. அவர் என்னை லேசாக உலுக்கினார். எதுவும் செய்ய அவருக்கு உரிமை உண்டு. எனது மூத்த சகோதரர் போன்ற அவர் வந்து மன்னிப்புக் கேட்டார். இதற்கான அவசியமே இல்லை. அவர் மீது புகார் செய்யும் எண்ணமும் இல்லை. ஐ.பி.எல். தொடர் முடிந்த பிறகு நாங்கள் ஒரே அணியில் நாட்டுக்காக விளையாட இருக்கிறோம்" என்றார்.
இதுபற்றி ஹர்பஜன் கூறுகையில்; "ஊடகங்கள் சொல்வது போல எந்த சம்பவமும் நடக்கவில்லை. நான் ஸ்ரீசாந்தை அடிக்கவே இல்லை. லேசாகத் தள்ளினேன். அவ்வளவு தான். இதுபற்றி அவரிடம் பேசி விட்டேன். நாங்கள் பல ஆண்டுகளாக அண்ணன் தம்பி போல ஒன்றாக விளையாடி வருகிறோம். இதேபோல தொடர்ந்து விளையாடுவோம்" என்றார்.
கால்பந்தில் ஜிடேன் - மாட்டராசி மோதலை மறக்க முடியாது. பாகிஸ்தான் கிரிக்கெட்டில் சொய்ப் அக்தர் சக வீரர் முகமது ஆசிப்பை துடுப்பால் தொடையில் தாக்கிய சம்பவமும் பரபரப்பானது. இதேபோன்று கெட்ட பையன் `இமேஜை' ஹர்பஜனும் பெற்றுள்ளார். இவர் எதிரணி வீரர்களை வம்புக்கு இழுப்பது வாடிக்கையான விடயம்.
ஹர்பஜனின் கிரிக்கெட் வாழ்வில் அரங்கேறிய முக்கிய சர்ச்சைகள்:
1998 இல் சார்ஜாவில் நடந்த முக்கோண ஒருநாள் தொடரில் அறிமுகமான போது அவுஸ்திரேலிய கப்டன் பொண்டிங்குடன் மோதினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் 2000 இல் பெங்களூர் தேசிய கிரிக்கெட் அக்கடமியில் சேர்க்கப்பட்டார். அங்கு நடத்தை காரணமாக நீக்கப்பட்டார்.
2002 இல் சௌகாத்தியில் நடந்த ஒருநாள் போட்டியின் போது சைமண்ட்சை `குரங்கு' என திட்டியதாக இனவெறி பிரச்சினையில் மாட்டினார்.