கொழும்பின் புறநகரில் இயங்கி வரும் மனநல காப்பகமொன்றுக்கு சென்றிருந்தேன். அங்கு தங்கியிருக்க வைக்கப்பட்டுள்ள ஆண், பெண் முதியோர்களில் தொண்ணூறு வீதமானோர் தமிழர்கள்.
இவர்களில் பெரும்பான்மையோர் வடபகுதியைச் சேர்ந்தவர்கள்.
இவர்களின் நிலைவரத்தைப் பற்றி விசாரித்த போது, இந்த முதியவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் குடும்பமாக வசிக்கிறார்கள் என்றும் அவர்களை நீண்டகாலமாகப் பிரிந்து வாழ்ந்ததால் தனிமை வாட்டி இவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டதென்றும் தெரியவந்தது.
பிள்ளைகள் வெளிநாடுகளில் வசிப்பதால் இந்த முதியவர்களை அதுவும் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் பராமரிக்க எவருமில்லாததால் இவர்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். வெளிநாடுகளிலிருந்து காப்பகக் கட்டணத் தொகை வந்து கொண்டிருக்கிறது.
என்னென்னமோ நடக்குது, ஒன்றுமே புரியலே நம்ம நாட்டிலே!