Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, April 29, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
எத்தகைய இடர்வரினும் விடுதலைக்கனலை நெஞ்சில் சுமந்து சுதந்திர தாயகத்துக்காக ஒன்றுபட்டு செயற்படுவோம்
[29 - April - 2008] [Font Size - A - A - A]
*யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா

தமிழ்த் தேசிய இனம் இன்று ஓர் நெருக்கடியான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. நாளை எம்மக்களுக்கு இதைவிடப் பெரிய அவலங்கள் ஏற்படலாம். அரசாங்கம் தமிழ் மக்களின் விடுதலை உணர்வை முற்று முழுதாக நிர்மூலமாக்குவதற்கு போரை கொடூரமாகக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. எமது இளைஞர்கள், தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டுமென்பதற்காக தாங்கள் உயிர்களை இந்த மண்ணின் விடுதலை வேள்விக்காக செய்த தியாகம் வீண் போகக் கூடாது. எனவே, நாம் எத்தகைய இடர்வரினும் ஒன்று பட்ட இனமாக, விடுதலைக் கனலை நெஞ்சிலே சுமந்து எமது சுதந்திரத் தியாகத்துக்காக எதனையும் ஏற்க ஒன்றுபட்டு நிற்போம்.

இவ்வாறு யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நல்லூர் இளம் கலைஞர் மன்றத்தில் இடம்பெற்ற இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க இணைப் பொதுச் செயலாளர் அமரர் தம்பிப்பிள்ளை பஞ்சலிங்கம் அமரத்துவம் அடைந்த முப்பத்தோராவது நாளையொட்டிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வுக்கு சரா. புவனேஸ்வரன் தலைமை தாங்கினார்.

பராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தொடர்ந்தும் உரையாற்றுகையில்;

"எமது மக்களின் விடுதலைப் போராட்ட உணர்வை உலக நாடுகள் நன்கு அறிந்துள்ளன. நாளை என்ன நடக்கப் போகின்றது என யாரும் கட்டியம் கூற முடியாது. எமது இனம் என்றைக்கும் சமபலமுள்ளதாக இருந்தால் தான் எமது இலட்சியத்தை வென்றெடுக்க முடியும். ஒரு சுதந்திரமான தாயகம் எமக்குக் கிட்டும் வரை நாம் சுதந்திரக்காற்றை சுவாசிக்க முடியாது.

அமரர் பஞ்சலிங்கம் இலங்கை தமிழர் ஆசிரிய சங்கத்தின் சிறந்த தலைமைத்துவப் பண்பு மிக்க தொழிற்சங்க வாதியாக சிறப்பாகச் சேவையாற்றியவர். அவருடைய போராட்ட உணர்வுகளை நாம் அறிவோம். எமது மக்களின் அவலங்களை வெளியுலகிற்குக் கொண்டு வருவதில் அவருடைய பணி அளவிடற்கரியது. அன்பினால் எதையும் சாதித்தவர். மொழிவழித் தொழிற்சங்கமாக தமிழர் ஆசிரியர் சங்கத்தின் போராட்டங்களில் முனைப்பாக செயற்பட்டு பல வெற்றிகளை ஈட்டிக் கொடுத்தவர். இனத்தின் விடுதலையே அவரது இலட்சியமாக இருந்தது. அவரது பணி யாழ்ப்பாணம், திருகோணமலை, மலையகம், மன்னார், மட்டக்களப்பு என தமிழர் வாழுமிடமெல்லாம் பரந்துவிரிந்து நின்றது. அவர் காலமாகிவிட்டார் என்ற செய்தி மகாசிவம் மூலம் கிடைத்தது. நல்ல துடிப்பான தொழிற்சங்கவாதிக்கு தற்போதைய காலத்து அவல மரணமாக இருக்குமோவென கலங்கிய போது அவருக்கு இனம் காண முடியாத நோயினால் மரணம் சம்பவித்ததாக அறிந்த போது ஆறுதல் அடைந்தேன்.

அவரிடம் இருந்த சிறந்த தலைமைத்துவப் பண்புகள் அவரை தொழிற்சங்க ரீதியிலும் தான் வகித்த பதவியிலும் சிறப்பான பணிகளை முன்னெடுக்க வைத்தது. அவரால் பல பணிகள் அவரது அரியாலைக் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அவர் எம்மைப் பிரிந்தாலும் அவரது பணி தொடர வேண்டும். நல்ல சிந்தனையாளனை, மக்கள் பணியாளனை, சிறந்த தொழிற்சங்கவாதியை இழந்து விட்டோம்" என்றார்.

நிகழ்வில் பலரும் அஞ்சலியுரையாற்றினர். நிகழ்வையொட்டி "பஞ்சதீபம்" நூல் ஒன்றும் வெளியிடப்பட்டு சகலருக்கும் வழங்கப்பட்டது.

Email this page Your Opinion Print this page
நீரில் மூழ்கியது இரத்தினபுரி ஆயிரக்கணக்கானோர் பரிதவிப்பு
மலையகத்தின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்
ஈரானிய ஜனாதிபதி அஹமத் நிஜாத்துக்கு விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பு
பகவதி ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் இலங்கைக்கு `நற்சான்றிதழ்'
முன்னைய நிலைப்பாட்டினை வாபஸ் பெற்றார் பகவதி
இரணைமடுவில் விமானத் தாக்குதல்
ரணில் இன்று கிண்ணியாவில் பிரசாரம்
உரும்பிராய் பகுதியில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை
தற்கொலை குண்டுதாரிக்கு உதவியதாக கைதான பெண் சி.ஐ.டி. விசாரணைக்குட்பட்டவேளையில் மரணம்
கல்கமுவ பஸ் நிலையத்தில் சக்திமிக்க நேரக்கணிப்புக் குண்டு
வடமாகாண சபையை வவுனியாவுக்கு இடமாற்றுவதற்கு எதிர்ப்பு போராட்டம்
தென்பகுதியில் கடும் கடற்கொந்தளிப்பு பெருமளவு இழுவைப்படகுகள் நாசம்
சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு சிறுவர்களை அனுப்பிய மூவர் கைது
கொள்கலனில் கொண்டுவரப்பட்ட 2 1/2 கோடி ரூபா பொருட்கள் தடுத்து வைப்பு
கொக்குவிலில் காணாமற்போன இளம் தாயின் சடலம் பாழடைந்த வீடொன்றில் கண்டுபிடிப்பு
கிழக்கில் ஐ.தே.க.வின் தேர்தல் பிரசாரத்திற்கு எதிராக அரசு பல்வேறு விதங்களிலும் அடாவடித்தனங்கள்
பஸ்குண்டு வெடிப்புகளையடுத்து பொது இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
இரு நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே மடு அன்னையின் திருச்சொரூபம் தேவாலயத்திற்கு வரும்
அரிசி ஆலைகளை சோதனையிட்ட குழு விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது
கிளைமோர் தாக்குதலில் விவசாயி உயிரிழப்பு
வெள்ளம், மண்சரிவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 15,000 ரூபா உதவி
அலுவலகங்களில் சிறந்த முகாமைத்துவத்தை கொண்டிருந்தால் மக்களுக்கு சிறப்பாகச் சேவையாற்ற முடியும்
வடபகுதியை மீட்க யுத்தம் நடைபெறும் அதேவேளை அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுத்து வருகிறோம்
அமைச்சர் கருஜெயசூரியவின் கருத்துக்கு அரசதுறை ஊழியர் தொழிற்சங்கம் கண்டனம்
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒருவரையொருவர் பகைத்து வாழ விரும்புவதில்லை
க.பொ.த.(சா/த) பரீட்சைக்கு அடுத்த மாதம் முதல் மாணவர்கள் விண்ணப்பிக்க ஏற்பாடு
சிற்றுண்டிச்சாலை குடிநீரில் மனிதக் கழிவு நீர்
வவுனியா - கொழும்பு ரயில் சேவையை வவுனியா வரை நடத்துமாறு கோரிக்கை
வெளிநாடுகளுக்கு பொதி அனுப்பும் நிறுவனங்களில் அதிக கட்டணம் அறவீடு
24 பொதுமக்களை பலிகொண்ட குண்டுவெடிப்பு கண்டிக்கப்படவேண்டிய கொடூர வன்முறை
குண்டை வெடிக்க வைத்து இராணுவச் சிப்பாய் தற்கொலை
மாத்தளையில் திடீர் தேடுதல்; 15 பேர் கைது
பணிப்பாளர் ஆண் தாதியை ஏசியதால் மாத்தறை வைத்தியசாலையில் பகிஷ்கரிப்பு
மட்டக்களப்பில் 136 இடங்களில் தபால்மூல வாக்களிப்பு
கொழுந்து கொள்முதல் செய்யக் கொண்டு சென்ற 2 1/2 இலட்சம் ரூபா துப்பாக்கி முனையில் கொள்ளை
தபால் மூல வாக்களிப்பில் வாக்காளர்கள் உற்சாகம்
புதிய வகை காய்ச்சலினால் மாத்தளையில் இருவர் மரணம்
எத்தகைய இடர்வரினும் விடுதலைக்கனலை நெஞ்சில் சுமந்து சுதந்திர தாயகத்துக்காக ஒன்றுபட்டு செயற்படுவோம்
கொட்டாஞ்சேனையில் அத்துமீறி தேடுதல் மேலக மக்கள் முன்னணி கண்டனம்
வோல்றீம் தோட்ட தேயிலைத் தொழிற்சாலை தீயில் எரிந்து நாசம்; பெருமளவிலான சேதம்
நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல துணைபுரிந்தவர்
வவுனியா பொது வைத்தியசாலை தாதிமார் பற்றாக்குறை உடனடியாக நீக்குமாறு சுகாதார அமைச்சிடம் வேண்டுகோள்
முஸ்லிம்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலை பயன்படுத்த வேண்டும்
60 தெங்கு ஆலை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளமையால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்பு
`உலக சந்தையில் ஏற்படும் விலையுயர்வினை காரணங்காட்டி அரசு மக்களை ஏமாற்றுகின்றது'
பெண்கள் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் அரசின் உத்தேச பரிந்துரை குறித்து ஊடகவியலாளர்கள் பங்காற்ற வேண்டும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com