மாத்தளை வைத்தியசாலையில் புதிய வைரஸ் காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இக்காய்ச்சல், எத்தகைய நிலைமைகளால், எவ்வாறு பரவியுள்ளது என்பதை இனங்காண முடியாத நிலையில், மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரு நோயாளிகள் மரணமடைந்துள்ளனர்.
மாத்தளை - ஹிக்கொல்லயைச் சேர்ந்த காளிமுத்து பரமசிவம் (வயது 58) மற்றும் லேலிஅம்பே பிரதேசத்தைச் சேர்ந்த குமாரி ஹாமி (வயது 29) ஆகிய இருவருமே புதிய வகைக் காய்ச்சலினால் உயிரிழந்தவர்களாவர்.
மாத்தளை நகர திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.ஜீ. ஜயதிலக்க, மரண விசாரணைகளை மேற்கொண்டார். மாத்தளை சட்ட வைத்திய அதிகாரி திருமதி பிரபா நாணயக்கார பிரேத பரிசோதனைகளை மேற்கொண்ட பின், காலஞ்சென்ற இருவரினதும் உடற்பாகங்கள் சிலவற்றை அரச பகுப்பாய்வுக்காக அனுப்பிவைத்துள்ளார்.