கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பில் வாக்காளர்கள் மிகவும் உற்சாகத்துடன் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு போன்ற தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் வாக்களித்ததனை காண முடிந்தது.
இத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்திலிருந்து 9,468 வாக்களார்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 4,427 வாக்காளர்களும், திருகோணமலை மாவட்டத்தில் 8,517 வாக்காளர்களுமாக மொத்தம் 22, 412 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
தபால் மூல வாக்களிப்பு நிலையங்களாக செயற்பட்ட இடங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததுடன் இப்பிரதேசங்களை சேர்ந்த தபால் நிலையங்களுக்கும் பாதுகாப்புக் கடமைகளில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று வாக்களிக்கத் தவறியவர்கள் இன்று வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.