தெனியாய ஊறுபொக்க பொலிஸ் பகுதியில் கொழுந்து கொள்முதல் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக ஊறுபொக்க பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை தேயிலைக் கொழுந்து கொள்முதல் செய்யும் வர்த்தகர் ஒருவர் இங்குள்ள வங்கியொன்றிலிருந்து இப்பணத்தை எடுத்து ஆட்டோ ஒன்றில் ஹிரிப்பிட்டிய பாதையில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், ஆட்டோவை மறித்து கைத்துப்பாக்கி முனையில் இக்கொள்ளையை நடாத்தியுள்ளனர்.
இது சம்பந்தமாக ஊறுபொக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.