மாத்தளை அரசாங்க ஆஸ்பத்திரியில் கடந்த சனிக்கிழமை மாலை சுமார் 200 ஆண் - பெண் தாதியினர் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
மாத்தறை, ஆஸ்பத்திரி உதவிப் பணிப்பாளருக்கும், ஆண் தாதி ஒருவருக்குமிடையே ஏற்பட்ட முறுகலே இப்பணிப் பகிஷ்கரிப்புக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
இங்குள்ள 16 ஆம் இலக்க வாட்டில் வெள்ளிக்கிழமை நோயாளர்களைப் பார்ப்பதற்காக அளவுக்கதிகமான பார்வையாளர்கள் வந்திருந்ததாகவும் அவர்களை உரிய நேரம் கடந்தும் வார்ட்டில் நிற்க அனுமதித்ததற்காக பணிப்பாளர் ஆண் தாதியை ஏசி தாக்க முற்பட்டதாகவும் இதைக் காரணம் காட்டியே இப்பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.
ஆஸ்பத்திரி உதவிப் பணிப்பாளர் ஆண்தாதிக்கு எதிராகவும், ஆண் தாதி பணிப்பாளருக்கு எதிராகவும் பரஸ்பரம் மாத்தறை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று திங்கட்கிழமை வழமை போன்று தாதியர் சேவை நடைபெற்றன.