மாத்தளை பொலிஸாரும் இராணுவத்தினரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாத்தளை பகுதிகளில் மேற்கொண்ட பாரிய தேடுதலில் 15 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுதாவளை 1 ஆம், 2 ஆம் வட்டாரம், ஆற்றங்கரை வீதி, டிக்கிரி வீதி, வேரகம ஆகிய பகுதிகளில் பொலிஸார் தேடுதல்களை மேற்கொண்டனர்.
இதன் போது தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களும், அடையாளங்களை உறுதி செய்து கொள்ள தவறியவர்களுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பான விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.